Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கோகிலா திருமணத்தில் அன்பு மற்றும் ஆனந்தியின் கல்யாணமும் நடந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள்.
ஆனால் இப்போது கோகிலா கல்யாணமே நடக்குமா அல்லது நடக்காதா என்ற அளவுக்கு சீரியல் போய்க் கொண்டிருக்கிறது. அழகப்பன் குடும்பத்தை எப்படியாவது மடக்கி கோகிலா திருமணத்தின்போது ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சுயம்புலிங்கமும் திட்டம் போட்டு இருக்கிறான்.
பலி ஆகும் ஆனந்தி
பல விதத்திலும் முயற்சி செய்து திட்டம் கை கூடாததால் கடைசியாக கோகிலாவை கடத்தி விடுகிறான். இரவு நேரத்தில் ஆனந்திக்கு வீடியோ கால் செய்து கோகிலாவை கடத்தி வைத்திருப்பதை பற்றி சொல்கிறான். மேலும் அவளுடைய திருமணம் நடக்க வேண்டும் என்றால் ஆனந்தி தனியாக இங்கே வர வேண்டும் என்றும் மிரட்டுகிறான்.
ஆனந்தியும் வழக்கம் போல பிரச்சனை இருக்கும் என்று தெரிந்தே யாருக்கும் சொல்லாமல் தனியாகத்தான் அங்கே போகப் போகிறாள். சௌந்தர்யா மற்றும் ரெஜினா மூலமாக இதை தெரிந்து கொண்டு அன்பு மற்றும் மகேஷ் அந்த இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
எப்படியும் இந்த காட்சிகளையே இன்னும் ஒரு மாதத்திற்கு இழுத்து விடுவார்கள் போல. அன்பு மற்றும் ஆனந்தியின் திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த புரோமோ பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.