Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. கோகிலா திருமணத்தை நிறுத்துவதற்காக கல்யாண மண்டபத்திற்கு மர்மப் பெண் ஒருவர் நுழைந்திருப்பது பெரிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
கோகிலா திருமணம் ஒரு வழியாக இப்போதுதான் பெண் அழைப்பு, நலங்கு எல்லாம் முடிந்து வரவேற்புக்கு வந்திருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் அன்பு மற்றும் ஆனந்தி நடனம் ஆடுகிறார்கள்.
திருமணத்தை நிறுத்த வந்த மர்ம பெண்
இதை பார்த்த மகேஷ் மறைமுகமாக சென்று மனம் வருத்தப்படுகிறான். அந்த இடத்திற்கு வரும் துளசி நீங்க என்னதான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உங்கள் மன வருத்தத்தில் இருந்தே ஆனந்தி காதல் தெரிகிறது என ஆறுதல் சொல்கிறாள். இதிலிருந்து மகேஷுக்கு ஜோடி துளசி தான் என்பது தெரிகிறது.
எல்லோரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருக்கும் பொழுது பெண் ஒருவர் பால்கனியில் இருந்து நிறுத்துங்க என்று கத்துகிறார். கண்டிப்பாக கோகிலாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் மாப்பிள்ளையின் காதலி என்றுதான் அந்தப் பெண் சொல்லப் போகிறார்.
இதுதான் காலகாலமாக எல்லா திருமணத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த பலே திட்டத்தை போட்ட கலகக்காரன் சுயம்புலிங்கமாக தான் இருக்கப் போகிறான். அன்பு சரியான நேரம் பார்த்து ஆனந்தி கழுத்தில் தாலி கட்ட திட்டம் போட்டிருக்கும் பொழுது, இந்த மர்மப் பெண்ணால் அதில் பெரிய சிக்கல் ஏற்பட போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.