Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தி இருவரது தலையிலும் இடியே இறக்கும் செய்தியாக இந்த ப்ரோமோ அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனந்தி கர்ப்பமாக இருப்பதும், கோகிலா திருமணத்தில் நடந்த விஷயம் எதுவும் மகேஷுக்கு தெரியாது. இப்படி இருக்கும் பட்சத்தில் அன்புவின் அம்மா லலிதா மற்றும் துளசி இருவரும் மகேஷின் காரில் பயணிக்கிறார்கள்.
மகேஷுக்கு தெரிய வரும் உண்மை
அப்போது மகேஷ் கோகிலாவின் திருமணத்தின் போது என்ன முடிவு எடுத்தீர்கள் என்று அன்புவின் அம்மா லலிதாவிடம் கேட்கிறான். உடனே லலிதா அங்கு என்ன நடந்தது என்றே உங்களுக்கு தெரியாதா என கேள்வி கேட்கிறார்.
மிரண்டு போன மகேஷ் என்ன ஆச்சு சொல்லுங்க என்று சொல்கிறான். எப்படியும் இன்றைய எபிசோடில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதையும், அவள் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க அன்பு முயற்சி செய்து கொண்டிருப்பதையும் சொல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் ரகு பிழைத்தாள் தான் தன்னுடைய மானம் காப்பாற்றப்படும் என தெய்வத்திடம் அழுது புலம்புகிறாள். அந்த நேரத்தில்தான் மருத்துவர் அன்பு மற்றும் ஆனந்தியை அழைத்து ரகுவின் குடும்பத்தாரை மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள் என்று சொல்கிறார்.
ஒருவேளை ரகுவின் உடல்நிலை மோசமானதால் அவர்களை வர வைக்கிறார் என்ற சந்தேகம் அன்பு மற்றும் ஆனந்திக்கு வருகிறது. ரகு உயிரிழந்தது போல் காட்டப்பட்டால் கண்டிப்பாக அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்கும் வேறு எந்த தடையுமும் கிடைக்க வாய்ப்பு இல்லை.
மருத்துவர் எதற்காக ரகுவின் குடும்பத்தாரை மருத்துவமனைக்கு வர வைக்க சொல்கிறார் என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.