Director : தமிழ் சினிமாவில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மென்மை, உணர்ச்சி, நகைச்சுவை சினிமாவின் நடுநிலைப் பார்வை என பன்முகம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லமை வாய்ந்தவர்.
நம் தமிழ் சினிமா உலகம் பாராட்ட மறந்த இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் வெங்கடேசன் வாழ்க்கையின் ஒரு நாளில் நடக்கும் சுவாரசியமான விஷயம், திருப்பங்கள், யாரும் எதிர்பாராத முடிவுகள் இப்படி தன் பாணியில் எளிமையான கதை சொல்லும், இயக்குனரின் தொடர் 4 ஹிட் படங்களை தற்போது பார்ப்போம்.
ஒரு நாள் கூத்து :
திருமணம் எனும் ஒரு நாள் கூத்துக்காக நடக்கும் நிகழ்வுகளை ஒரே நாளில் சொல்வது போல தன் கதையில் ட்விஸ்ட் வைத்து சொல்லி இருப்பார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது.
மண்டேலா :
2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் முற்றிலும் கிராமப்புற பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டது. சிறிது அரசியல் பின்னோக்கும் இருந்தது. யோகி பாபுவின் கதாபாத்திரம் நகைச்சுவையாக ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்தது.
பெரியார் தேர் :
குறும்படமாக இந்த திரைப்படத்தை இயக்கினார் நெல்சன் வெங்கடேசன். சுயநலம் நிறைந்த வாழ்க்கையில் சமூக பிரச்சனைகளையும், பகை உணர்வையும் கொண்ட கதைக்களமாக இருந்தது. குறும்படமாக இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.
ஃபார்ஸ் :
பெண்கள் வாழ்வில் இருக்கும் கலாச்சார சிக்கல்கள், அவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகளை மையமாக கொண்டு திரைப்படத்தை இயக்கினார் நெல்சன் வெங்கடேசன். இந்த திரைப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்தார். சின்ன சின்ன நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும், படம் பெரிதளவில் பாராட்டப்பட்டது.