Keerthi shetty : உபெனா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். தான் நடித்த ஒரே திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற கீர்த்தி ஷெட்டி தமிழில் கஸ்டடி என்ற திரைப்படத்தின் மூலம் மக்களின் மனதிடம் பிடித்தார்.
அதன் பின் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தற்போது கீர்த்தி ஷெட்டிக்கு நேரம் சரியில்லையா என்று வலைத்தள விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது கீர்த்தி ஷெட்டி மூன்று திரைப்படங்களில் நடித்து முடித்தார். துரதிஷ்டவசமாக அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒத்திவைக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடித்த 3 படத்திலும் முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளனர்
லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி :
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து உள்ளார். இத்திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டு வெளிவர இருந்த இத்திரைப்படம் ஆகஸ்ட் 18 வெளியிடப்பட திட்டமிடப்பட்டது. மீண்டும் திரை வெளியீடு தள்ளி போடப்பட்டது.
ஜெனி :
ஆஹா கல்யாணம் இயக்கும் திரைப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார். தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
வா வாத்தியார் :
கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி கலக்கியிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. பல நாட்களாக அப்போது இப்போது படம் வெளியீடு என கூறப்பட்ட வந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.