சினிமாவில் மட்டும் நான் ஹீரோ இல்லை நிஜத்திலும் அப்படித்தான் என நற்குணத்தோடு வாழும் நடிகர்கள் பல பேர் இருக்கிறார்கள் ஆனால் அது எல்லாம் வெளியே தெரியாவிட்டாலும் இப்பொழுது 4 நடிகர்கள் செய்யும் பல நல்ல தெரிந்த போதிலும் அதை பற்றிய சில விஷயங்களை இங்கே காணலாம்,
சூர்யா: தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு இதை ஆரம்பித்தார் சூர்யா. இன்று வரை இதில் சுமார் 6000 பட்டதாரிகளை உருவாக்கி சாதித்து காட்டியிருக்கிறார்.
ராகவா லாரன்ஸ்: ஏழைக் குழந்தைகளுக்கு, பெற்றோர், பாதுகாவலர் இல்லாத கைவிடப்பட்ட பல குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். குழந்தைகளின் கல்வி, ஆதரவற்றவர்களுக்கு மருத்துவ உதவி, 30க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
KPY பாலா: விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு பாலா. இவர் அந்த அளவுக்கு சம்பாதிக்காவிட்டாலும் தான் சம்பாதித்ததை வைத்து பல ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். குறிப்பாக மூன்று ஆம்புலன்ஸ் வாகனத்தை கடம்பூரில் உள்ள வயதானவர்கள் இல்லத்திற்கு தானமாய் கொடுத்துள்ளார். ரோட்டில் கஷ்டப்படுபவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்து வருகிறார்.
ஸ்ரீலிலா: பிரபுதேவா போல் அட்டகாசமாக நடனம் ஆடக்கூடியவர் ஸ்ரீலிலா. இவருக்கு இப்பொழுது வயது 24. ஆனால் தன்னுடைய 21வது வயதிலேயே இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில் மற்றும் ஒரு குழந்தையை தத்தெடுத்து உள்ளாராம். இந்த வயதில் இப்படி ஒரு பக்குவமா என அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் ஸ்ரீலிலா.