Roshini Haripriyan : விஜய் டிவியில் ஒருசில வருடங்களுக்கு முன்பு பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல்தான் “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக வலம் வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன்.
இந்த சீரியல் அடுத்த கட்டத்திற்கு பிரபலமாக்கப்பட்டதே இவரால்தான். இவர் பையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, இவர் சென்ற காட்சிகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டு இவரை மேலும் பிரபலமாக்கிவிட்டன சமூக வலைத்தளங்கள்.
தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் கண்ணம்மா..
ரோஷினிக்கு இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே பட வாய்ப்புகள் வந்ததால் பாதியிலேயே இந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். தனது நடிப்பு திறமையால் தற்போது தமிழ் சினிமாவில் காலடி பதித்துள்ளார்.
விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிறகு “கருடன்” படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். “மெட்ராஸ் மேட்னி” படத்தில் இவரது நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது.
தற்போது “தலைவன் தலைவி” படத்தில் இவர் கதாபாத்திரம் இன்னும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இவர் கைவசம் சில படங்களை வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
இவரது அலட்டிக்கொள்ளாத நடிப்பு இவருக்கு நன்றாகவே செட் ஆகிவிட்டது என்று சொல்கிறார்களாம். தனது நடிப்பு திறமை மூலம் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார் ரோஷினி ஹரிப்ரியன். இன்னும் அடுத்தடுத்த படங்கள் இவர் செய்ய வேண்டும் என திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.