சின்ன மருமகள்: மோகனா தமிழை பார்த்து விஷயம் இல்லாம நீ இந்த வீட்டு வாசப்படியில வந்து நிக்க மாட்டேன் என்று தெரியும் எதுக்கு நீ இப்போ வந்திருக்க என்று கேட்கிறாள்.
முதல்ல நீங்க யாருமே மாமாவோட நல்ல பேருக்கு ஏதாவது கலங்கம் வந்துருமோ மாமாவுக்கு ஏதோ அவ பேர் உண்டாயிருமோன்னல்லாம் யாரும் பயப்பட வேண்டாம். மாமாவோட நல்ல பெயருக்கு களங்கம் வர இருந்தது உண்மைதான். படிக்காத முட்டாள்ன்னு சொல்லுங்கள்ல அதுதான் நான்னு சொல்லி எங்க அப்பா நிரூபிச்சிட்டாரு என்று தமிழ் சொல்கிறாள்.
எங்க அப்பா அவரோட பேரை பயன்படுத்தி இங்க எல்லாரையும் ஏமாத்தி
இருக்காருங்கிற விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்லி எங்க அப்பாவும் நானாதான் உங்க கிட்ட இருந்து பணம் வாங்குனேன்னு அவங்க எல்லார் கிட்டையும் சொல்லிட்டாரு.
இதுக்கும் மாமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு வாக்கு மூலமும் கொடுத்துட்டாரு. அதனால இந்த பிரச்சனை இதோட முடிஞ்சது நீங்க யாரும் இதை நினைச்சு எதுவும் கவலைப்பட வேண்டாம். நான் மறுபடியும் சொல்றேன் மாமா எந்த தப்பும் பண்ணாதவர் அவரோட நல்ல பேருக்கு இன்னைக்குமே எங்க குடும்பத்தில இருந்து எந்த கலங்கமும் வரவிட மாட்டேன்.
எதிர்கட்சியின் செயல்
மாமாவுக்கும் இந்த குடும்பத்துக்கும் வர இருந்த அவமானத்தை நான் தடுத்து நிறுத்திட்டேன். எங்க அப்பா செஞ்ச தப்புக்கு அவரை ஜெயில்லையும் போட்டாச்சு. எங்க அப்பா பண்ண தப்புக்கு நான் உங்க எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறாள்.
இவள் நல்லவன்னு காட்டிக்கிறதுக்காகதானே இவள் அப்பனை போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுட்டு வந்துருக்கா மத்தபடி அவளுக்கு உன் மேலயோ இந்த குடும்பத்து மேலயோ எல்லாம் எந்த அக்கறையும் கிடையாது என்று சாவித்ரி ராஜாங்கத்திடம் சொல்கிறாள்.
சரி இப்ப எதுக்கு வாசல்லயே நின்னு பேசிக்கிட்டு தலைக்கு வந்தது தலைப்பாவையோட போயிடுச்சுன்னு நினைச்சு நாம சந்தோஷபட வேண்டியது தான் தப்பு செஞ்ச அவனே ஜெயிலுக்கு போயிட்டான்.
உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுதானே ஆகணும் சேது நீ உள்ள வாப்பா அண்ண சரி அண்ணே ஒரு நிமிஷம் இன்னைக்கு ஊர்காரங்க பண்ண இருந்த காரியத்தை நினைச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
நம்ம மேல எதிர்கட்சிக்காரங்க என்ன பழி சுமத்தலாம் நம்ம ஆட்சிக்கு எப்படி கெட்ட பேரை வாங்கி தரலாம்னு அவன் திட்டம் போட்டுட்டு இருக்காங்க அவங்களுக்கெல்லாம் வெறுவாய்க்கு அவல் கொடுத்தது மாதிரி என்று சன்னாசி சொல்கிறான்.