சின்ன மருமகள் சீரியலில் சேது தமிழ்கிட்ட சண்டை போட்டு தானே சிக்கன் பிரியாணி செய்கிறான். அதை பார்த்த அம்மாச்சியும், மலரும் இவன் ருசியா தானே சமைத்து சாப்பிட்டால் எப்படி தமிழோடு சேருவான் என்று சொல்லி சேது செய்த பிரியாணியில் உப்பு காரம் அள்ளி போட்டு சாப்பிட விடாமல் செய்கிறார்கள்.
அந்த விரக்தியோடு கடைக்கு வந்த சேது தமிழ் தன்னுடைய பிரண்ட் சக்தியோடு வண்டியில். வருவதை பார்த்து ரொம்ப கடுப்பாகிறார். அந்த கோபத்தில் வீட்டிக்கு திரும்ப வந்த சேது கிட்ட சாவித்திரியும், தாமரையும் வழக்கம் போல் தமிழ் சக்தியோட வண்டியில் வருகிற வீடியோவை காண்பிக்க சேதுவோ நான் ஏற்கனவே இதை நேரில பார்த்துட்டேன் நீங்க வேற வீடியோ காட்டி, வெறுப்பேத்தாதீங்க என்று கத்துறான்.
தமிழ் காலேஜில் இருந்து வரவும் நீ கண்டவன் கூட எல்லாம் சுத்தி திரியதான் காலேஜ் போறேன் டெய்லி வீட்டை விட்டு போறாயா என்று சேது கோபமாக கேட்கிறான்.
தமிழோ அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் படிக்க தான் போறேன் என்று சொல்ல நீ என்னை ஏமாத்தவா செய்ற என்று சொல்லி தமிழை கீழே தள்ளி விடுகிறான்.
இதனால் கர்ப்பமாக இருந்த தமிழின் வயிற்றில் அடிபட்டு வலியால் துடிக்கிறாள். இதை பார்த்த பாட்டியும் மலரும் சேதுவை திட்டி ஹாஸ்பிடலுக்கு அழைத்து போக சொல்கிறார்கள்.
சேது தமிழை வறாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறான் டாக்டர் தமிழுக்கு கரு கலைஞ்சிருட்டு என்று சொல்லவும் சேது நம்ம பெரிய தப்பு செய்துவிட்டோம் வீட்ல எல்லார்கிட்டயும் என்ன சொல்ல போறாம் என்று அழுது புலம்புகிறான்.
இந்த விஷயம் வீட்டில் தெரிந்து எல்லாரும் அதிர்ச்சி அடைய அப்பத்தா மயங்கி கீழ விழுகிறாள். ஆனால் தாமரையும், சாவித்திரியும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.