சின்ன மருமகள் சீரியலில் செல்ல துரையிடம் மாடசாமி அண்ணன் நீ யாரு கிட்டலாம் பணம் வாங்கினாயோ எல்லோரும் சேர்ந்து ராஜாங்கம் தான் லஞ்சம் வாங்கியதாக போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க போறாங்க. இதுக்கு எல்லாம் காரணம் எதிர்கட்சி காரன் வேலைதான் என்று கூறுகிறான்.
எப்படியாவது ராஜாங்கத்தை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி, ஊருல
கலவரத்தை ஏற்படுத்தனும் என்று எதிர்கட்சி தாரன் முடிவு எடுத்துதான் என்று கூறுகிறான்.
தமிழ் செல்வி இதையெல்லாம் கேள்விபட்டதும் அரசியல் வாழ்க்கையில ஒரு கறைபடிய கூடாது லஞ்சம் வாங்க கூடாது நினைக்கிற மனுஷன் மேல எல்லாரும் லஞ்சம் வாங்குறாரு கம்ளைண்ட் கொடுக்க போறாங்க இதுக்கு எல்லாம் நீங்க தானே காரணம் என்று செல்லதுரையை திட்டுகிறாள்.
எனக்கு நீங்கதான் எல்லார் கிட்டயும் பணம் வாங்கியத தெரிந்தவுடன் உங்களை போலீசில் பிடித்து கொடுத்திருக்கணும் அதை செய்யாதது தான் இப்ப பெரிய தப்பு என்று செல்லதுரை பார்த்து தமிழ்செல்வி கூறுகிறாள்.
அதிர்ச்சியில் சேதுவின் குடும்பம்
ஆண்டிசாமி மூலம் எதிர்கட்சிகாரங்க போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க போறாங்க என்ற விஷயம் தெரிந்ததும் சேது எங்க அப்பா மீது எவனாவது கம்ப்ளைன்ட் கொடுத்தால் அந்த செல்லதுரை குடும்பத்தை அழிக்காமல் விடமாட்டேன் என கோபப்படுகிறான் .
ராஜாங்கம் என் மீது மட்டும் கலங்கம் வந்துச்சுனா நான் என் உசுரையே விட்டுவிடுவேன் என்று கூற குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதையெல்லாம் கேட்ட ஈஸ்வரி இதற்கெல்லாம் காரணம் நம்ம பையன் போஸ் தான் என்று நினைக்கிறாள். ராஜாங்கம் இறந்துவிட்டால் சொத்து எல்லாம் நமக்கு தான் சொந்தம் என்று நினைத்து சந்தோசப்படுகிறாள்.
தமிழ் செல்வி வந்திருக்கிறாள் என்ற விஷயத்தை ஆறுமுகம் மூலம் தெரிந்த தாமரை இல்லாததும் பொல்லாததும் -சொல்லி சேதுவை தாமரைக்கு எதிராக திருப்பி விடுகிறாள்.