தமிழ் சினிமா உலகில் காமெடி என்றாலே நினைவுக்கு வரக்கூடிய சில முகங்கள் இருக்கின்றன. அவர்களில் ஒருவர் KPY பாலா. “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியிலிருந்து வந்த அவர், இன்று திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில், அவர் நடித்துள்ள காந்தி கண்ணாடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும்” — இந்த ஒரு டயலாக் மூலமாக பாலா மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறார். ஆனால், அவர் நல்லது செய்ததற்காக படம் பார்க்க வேண்டுமா என்பது ரசிகர்கள் இடையே விவாதமாகியுள்ளது.
தொலைக்காட்சியில் முதல் வெற்றி
KPY பாலா முதலில் சின்னத்திரையில் தனது காமெடி டைமிங்கால் பிரபலமடைந்தார். அவரின் இயல்பான நடிப்பு, தனித்துவமான குரல், சின்ன சின்ன நகைச்சுவைச் சம்பவங்களால் பார்ப்பவர்களின் மனதை கவர்ந்தார்.
சினிமாவில் அறிமுகம்
பின்னர் அவர் சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தாலும், ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கது. இன்று அவர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.
“சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும்” – வைரலான வசனம்
பாலாவின் இந்த வசனம் மக்கள் மனதில் நன்கு பதிந்துவிட்டது. மீம் பக்கங்கள், யூட்யூப் ஷார்ட்ஸ், ரீல்ஸ் எல்லாம் இந்த வசனத்தைப் பயன்படுத்தி ரசிகர்களிடம் செல்வாக்கு பெற்று வருகின்றார். இவருடைய நோக்கமே சின்ன சின்ன ரோல்களில் நடித்து கிடைக்கும் பணத்தை தாராளமாக நல்லது செய்து வந்தால், இதன் மூலம் பேரும் புகழும் அடைந்து நம்மளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைத்துவிடும் என்பதுதான் இவருடைய நோக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த காலத்தில் யார் வைரலாக வேண்டும் என்றாலும் அவர்கள் சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும். அதற்காகத்தான் அடித்தளமாக முதலில் நல்லது செய்வது போல் மக்கள் மனதில் இடம் பிடித்து தற்போது ஹீரோவாக அவதரித்து அதன் மூலம் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று இவரை சுற்றி மீம்ஸ்கள் கிரியேட் ஆகி வருகிறது.

ரசிகர்களின் பார்வை
பலர் “பாலா நகைச்சுவை மட்டுமல்ல, நல்ல மனசுக்காரர். அவர் நடித்த படம் வந்தால் கண்டிப்பா போய் பாக்ஸ் ஆபீசில் ஆதரிக்கணும்” என்று கூறுகிறார்கள்.
விமர்சகர்களின் பார்வை
ஆனால் விமர்சகர்கள் “நல்லது செய்வது வேறு, படம் ஹிட் ஆகும் திறன் வேறு. வெறும் சிம்பதி வோட் மட்டும் போதாது. கதை, திரைக்கதை, டைரெக்ஷன் எல்லாம் பொருத்தமாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள்.
⦁ சின்ன மீன் – சிறிய ரோல், சின்ன வாய்ப்பு, சின்ன வசனம்.
⦁ பெரிய மீன் – பாக்ஸ் ஆபீஸ் வெற்றி, பெரிய ரசிகர்கள் அன்பு, அதிகமான அங்கீகாரம்.
பாலா அந்த “சின்ன மீன்” மக்களுக்கு நல்லது செய்து வருவது “பெரிய மீன்” ரசிகர்கள் அன்பை பெற்றிருக்கிறார். இதுவே அவரது வெற்றியின் ரகசியம்.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
சமீபத்திய தமிழ் சினிமாவில் யோகிபாபு, சதீஷ், முந்தைய காலத்தில் வடிவேலு போல, பாலாவுக்கும் தனி ஸ்டைல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.
ஹீரோ சான்ஸ் கிடைக்குமா?
ரசிகர்கள் ஆதரவு அதிகரித்தால், ஹீரோயிசம் கொண்ட கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.