Dhanush-Simbu: சோசியல் மீடியாவில் சிம்பு, தனுஷ் ரசிகர்கள் இடையே நடக்கும் சண்டை வருட கணக்காக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட வெற்றிமாறன் பட பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்தது.
அதற்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர். அதை அடுத்து தற்போது ஒரு பழைய பிளாஷ்பேக் சம்பவத்தை வலைப்பேச்சு பிரபலம் அந்தணன் கூறியுள்ளார்.
உடனே சிம்பு தனுஷ் ரசிகர்கள் மீண்டும் சண்டைக்கு தயாராகி விட்டனர். அதாவது சில வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் பங்கேற்பதற்காக நயன்தாரா வந்திருக்கிறார். அதே விழாவில் சிம்புவும் பங்கேற்பதாக இருந்தது.
இதை தெரிந்து கொண்ட நயன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் சிம்பு வரக்கூடாது என கட் அண்ட் ரைட்டாக சொல்லி இருக்கிறார். இதனால் தடுமாறிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிம்புவிடம் மெதுவாக இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார்.
உடனே அவர் இதை பெரிசு படுத்தாமல் அவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்துங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து வந்திருக்கிறார். அதேபோல் தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ஃப்ளாஷ் பேக் சம்பவம்
கீர்த்தியை சில காரணங்களுக்காக தனுஷ் கட்டாயப்படுத்தி இருக்கிறார். அவர் முடியாது என மறுப்பு தெரிவித்த நிலையில் சரியாக நடிக்காமல் ஒரு காட்சியை அதிக டேக் வாங்கி இருக்கிறார் தனுஷ்.
கீர்த்தி சோர்ந்து போகும் அளவுக்கு இரண்டு, மூன்று நாட்கள் இந்த பிரச்சனை தொடர்ந்து இருக்கிறது. அதை அடுத்து அவர் தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்து இந்த பிரச்சனை பற்றி கூறினாராம்.
ரஜினியின் நெருங்கிய நண்பரான கீர்த்தி சுரேஷின் அப்பா இந்த விஷயத்தை அவர் காதுக்கு போட்டிருக்கிறார். அதன் பிறகு தான் தனுஷ் தொல்லை நீங்கியதாம். இதையும் அந்தணன் தான் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி தனுஷ் பல ஹீரோயின்களுக்கு குடைச்சல் கொடுத்திருப்பதாக கூட சில தகவல்கள் இருக்கிறது. அதில் சிம்புவை கம்பேர் செய்து பார்க்கும் போது அவருக்கு இருக்கும் பெருந்தன்மை இவருக்கு கிடையாது என ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.