Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், அம்மா பாசத்திற்காக ஏங்கும் க்ரிஷ் தற்போது முத்து மீனா கூட இருப்பதால் அங்கே இருக்கும் ரோகிணியை பார்த்து பேசுவதற்கு முயற்சி எடுக்கிறார். அதனால் எல்லோரும் தூங்கிய பொழுது ரோகினியின் ரூமுக்கு சென்று கிரிஷ் பேசுகிறார். அப்பொழுது ரோகினி, இங்கே யார் உன்னை பற்றி கேட்டாலும் யாரிடமும் உண்மை சொல்லக்கூடாது.
முக்கியமா நான் தான் உன் அம்மா என்று யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்கிறார். அதற்கு கிரீஷ் சரி என்று சொல்லிய நிலையில் நான் உன் கூடவே தூங்குகிறேன் என்று கேட்கிறார். ஆனால் அதற்குள் மீனா, கிரிஷியை தேடியதால் ரோகிணி கிரிஷை வெளியே அனுப்பி விடுகிறார். ரோகிணி ரூமில் இருந்து வெளியே வந்த கிருஷிடம் நீ இந்த ரூமுக்கு எல்லாம் போகக்கூடாது என் கூடவே இருக்கணும் என்று மீனா சொல்கிறார்.
அடுத்ததாக கிரிஷ் பாட்டியிடம் கூட்டிட்டு போவதற்காக முத்து, கிரிஷை ஸ்கூல் லீவ் போட சொல்கிறார். அதற்கு கிரீஷ் லீவ் லெட்டர் கொடுக்க வேண்டும் என்று சொல்லிய பொழுது ரோகிணி எழுதிக் கொடுக்கிறார். அப்படி ரோகினி எழுதிக் கொடுக்கும் பொழுது கையெழுத்து போடும்போது அம்மா இடத்தில் ரோகிணி அவருடைய பெயரை போட்டு விடுகிறார்.
இந்த லெட்டரை பார்த்து மனோஜ் நீ ஏன் உன்னுடைய பெயரை போட்டு இருக்கிறார் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ரோகிணி ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். அப்பொழுது முத்து மீனாவுக்கு சின்ன சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. அடுத்ததாக மறுபடியும் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது இரவு நேரத்தில் க்ரிஷ் ரோகிணியின் ரூமுக்கு போகிறார்.
வழக்கம் போல் மீனா எழுந்து கிரிசை தேடியதும் ரோகினி கிரிஷை வெளியே அனுப்புகிறார். ஆனால் க்ரிஷ் போக மாட்டேன் என்று சொல்லிய பொழுது ரோகினி வற்புறுத்தி வெளியே அனுப்பி வைக்கிறார். இதை பார்த்து மீனா, ரோகிணி அடித்ததாக நினைத்து திட்டுகிறார். உடனே முத்துவும் எழுந்து வந்து ரோகினிடம் ஏன் அடித்தீர்கள் என்று கேட்ட பொழுது நான் அடிக்கவில்லை சாதாரணமாக தான் சொன்னேன் என்று சொல்கிறார்.
அப்போது கிருஷிடம் கேளுங்கள் என்று ரோகினி சொல்கிறார். உடனே முத்து கேட்ட பொழுது க்ரிஷ் இல்லை என்று பொய் சொல்லி சமாளித்து விடுகிறார். ஆனால் முத்து மீனாவுக்கு தொடர்ந்து ஏன் க்ரிஷ் இரண்டு நாட்களாக ரோகிணியின் ரூமுக்கு போகிறான். ரோகிணிக்கும் க்ரிஷ் மீது பாசம் இருக்கிறது. எல்லா விஷயத்துக்கும் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணும் ரோகினி க்ரிஷ் விஷயத்தில் மட்டும் நமக்கு கூட நின்னாங்க என்று சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில் இன்னும் ஒரு வாரத்தில் ரோகினி மாட்டிக்கொண்டு முழிக்க போகிறார். ரோகிணி கல்யாணி ஒருவர் தான், அவர் தான் க்ரிஷ் அம்மா என்று உண்மை வெளிவரப்போகிறது. அடுத்ததாக விஜயா நடத்தும் பரதநாட்டிய பள்ளிக்கூடத்தில் அந்தப் பெண் மயக்கம் போட்டு விழுந்தவுடன் டாக்டர் வந்து செக் பண்ணி பார்த்து கர்ப்பம் என்பதை விஜயாவிடம் சொல்கிறார். இதை கேட்டதும் விஜயா அதிர்ச்சியாகி விட்டார், இதனால் பிரச்சினையாகி விஜயா பரதநாட்டியம் பள்ளிக்கூடத்தை மூட போகிறார்.