சிறகடிக்க ஆசை சீரியலில், மீனாவை பகடை காயாக்கும் அருண்.. கேள்விக்குறியாகும் சீதாவின் வாழ்க்கை ? – Cinemapettai

Tamil Cinema News

Vijay Tv : விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில். ஏற்கனவே முத்துவிற்க்கும் அருணுக்கும் இடையில் பகை இருந்து வந்த நிலையில் சீதாவின் காதலன் அருண் என தெரியவந்ததும் முத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . முத்துவின் மனதை மாற்ற அருனுக்கு வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டார். முத்துவிடம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அருண் இன்னும் மனமிறங்கி வரவில்லை ,தான் செய்த தவறையும் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.

இவ்வாறு சஞ்சலம் இருந்து கொண்டிருந்த நிலையில் அருண், சீதா மற்றும் மீனாவை தனியாக சந்தித்து எனது அம்மா எனக்கு வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் நான் சீதாவை தான் திருமணம் செய்து கொள்வேன். அதற்கு, நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்று மீனாவிடம் கேட்கிறான்.

மீனா எனது கணவரை எதிர்த்து நான் இதுவரை எந்த ஒரு காரியமும் செய்வதில்லை என்று கூறுகிறார். அருண் சீதாவிற்கும் எனக்கும் பதிவு திருமணத்தை நீங்கள் யாருக்கும் தெரியாமல் செய்து வையுங்கள், சீதா உங்கள் வீட்டில் இருப்பது போலவே இருக்கட்டும். விஷயம் வெளியே வந்தவுடன் பிறகு சமாளித்துக் கொள்ளலாம் எங்களுக்கு நீங்கள் தான் உதவ வேண்டும் என்று ஆணித்தரமாக மீனாவிடம் கேட்டுக் கொண்டார் .

மீனா சற்று நேரம் சிந்தித்து விட்டு அங்கிருந்து கோவிலுக்கு புறப்படுகிறாள் .அங்கே அருண் அம்மாவை சந்திக்கிறாள் , அருண் அம்மாவோ என் மகன் சீதாவின் மேல் உயிரையே வைத்துள்ளான். இருந்தாலும், இந்த திருமணம் நடக்காது என்பது எங்களுக்கு தெரிகிறது என்று மீனாவிடம் கூறுகிறார். மீனா எதுவும் பேசாமல் நிற்கிறாள் பிறகு அருணின் அம்மா , ஆனால் நான் என் மகனுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று மீனாவிடம் கூறிவிட்டு செல்கிறாள் .

அங்கே முத்துவும் சீதாவிற்காக ஒரு மாப்பிள்ளை அழைத்துக் கொண்டு மீனாவை பார்க்க வருகிறான் .அந்த மாப்பிள்ளை டிரைவர், நிறைய வசதி வாய்ப்புகள் உள்ளன என முத்து மீனாவிடம் மாப்பிள்ளையை அறிமுகப்படுத்துகிறான். உடனே மீனா எதுவும் கூறாமல் அங்கிருந்து கோவிலுக்கு உள்ளே செல்கிறாள். முத்து மீனாவை பின் தொடர்ந்து என்ன மீனா எதுவும் சொல்லாமல் வந்து விட்டாயே என்று கேட்கிறான். அதற்கு மீனா சீதாவோ பட்டப்படிப்பு படித்தவள் .இவரோ டிரைவர் எப்படி ஒத்துக் கொள்வாள் என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறாள் .

முத்துவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை . தானும் டிரைவர் தானே என்ற எண்ணம் அவரின் முகத்தில் சிறு வாட்டத்தை கொண்டு வந்தது . இருந்தாலும் பெரிதாக அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை .அடுத்து மீனா பூசாரியை சந்திக்கிறாள் பூசாரி மீனாவிடம் என்ன மன குழப்பத்தில் இருக்கிறாய் என்று கேட்கிறார் . எதுவாக இருந்தாலும் கடவுளிடம் விட்டுவிடு என்று கூறிவிட்டு செல்கிறார் பூசாரி . உடனே மீனா இரு துண்டு சீட்டை எடுத்து அதில் எழுதி கடவுளின் முன்பு போட்டு ஒரு சீட்டை எடுத்து , அதில் என்ன முடிவு வருகிறதோ அதையே பின்பற்றப்போவதாக மனதில் நினைத்துக்கொள்கிறாள் .

சீதாவிற்கு அருணுக்கும் திருமணம் செய்து வைக்கும் மீனா …

அந்த சீட்டில் திருமணத்திற்கு சம்மதம் என வருகிறது . உடனே மீனாவும் சீதாவும் மகிழ்ச்சி அடைகிறார்கள் . பிறகு மீனா அருணை சந்தித்து சீதா உங்களை காதலிக்கவில்லை என்றால் நான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்க மாட்டேன் . அப்பா இருந்திருந்தால் என் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பார் என்று சீதா வருத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே சம்மதம் தெரிவித்துள்ளேன் . ஆனால் நீங்கள் செய்தது அனைத்துமே தவறு உங்களை தவறை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன் என்று கூறி ஆனாலும் சீதாவிற்காக திருமணம் செய்து வைப்பேன் என ஒப்புதல் அளிக்கிறாள் .

அதனால் மீனா முத்துவிற்கும் தனது வீட்டிற்கும் தெரியாமல் சீதா மற்றும் அருண் திருமணத்தை முடித்து வைக்க போகிறாள் . இதனால் முத்துவிற்கு மீனாவிற்கும் நடுவில் பெரிய விரிசல் வரப்போகிறது . சீதாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்க போகிறது . அருண், முத்துவை பழிவாங்க மீனாவை பகடைக்காயாக பயன்படுத்தப் போகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இந்த வார எபிசோடில் பார்க்கலாம் .

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.