சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ரஜினி, தேவா என்கிற கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா சௌபின் சாஹிர்அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் கதையில் வலுவூட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது. கேரளாவில் முன்பதிவு காலை தொடங்க, தமிழ்நாட்டில் இரவு 8 மணிக்கு ஆரம்பமானது. சில நிமிடங்களில் பல ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆகி, ரசிகர்கள் படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
லக்ஷ்மி தியேட்டர் முதல் டிக்கெட் விற்பனை வரையில் கூலி உலகளாவிய அளவில் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ரஜினிகாந்தின் கவர்ச்சி, 90களின் ‘முத்து’ காலத்திலிருந்து இன்று வரை மாறாதது என நிரூபிக்கப்பட்டது. இந்த வெளியீடு, இந்திய திரையுலகில் ஒரு புதிய சாதனைப் பக்கத்தை எழுத உள்ளது.
பெங்களூரில் 37 நிமிடங்களில் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி KGF 2 மற்றும் லியோ சாதனைகளை முறியடித்தது. KGF 2-க்கு 45 நிமிடமும், லியோ-க்கு 50 நிமிடமும் பிடித்த சாதனை, இப்போது கூலி அதை வென்றுள்ளது.மொத்தம் 66 ஷோக்களில் இப்படியான வேகமான விற்பனை நடந்தது.
பெங்களூரில் FDFS டிக்கெட்டுகள் ரூ.1000, ரூ.800 விலையில் 2 நிமிடங்களில் சோல்ட் அவுட் ஆனது பெங்களூர் மக்களிடையே படத்தின் மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். RGB லேசர் 4K டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் படம் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை நிச்சயமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் கிடைத்த பெரும் வரவேற்புக்கு உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் ரஜினியின் சொந்த ஊராக பெங்களூரு இருப்பதும் காரணம் என்றும் கூறலாம். இதற்கு முன் ஜெயிலர் அங்கு 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது நினைவில் கொள்ளத்தக்கது. கூலி படத்தின் மீதும் ரசிகர்கள் மீண்டும் அதே வெற்றியை எதிர்நோக்குகின்றனர்.