தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமானது ஒரு பிரபல தொலைக்காட்சி. அவர் மிமிக்ரி கலைஞராக அந்த சேனலில் அறிமுகமாகி, பின்னர் தொகுப்பாளராக மாறினார். அதே சேனலின் வாயிலாகவே அவர் திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார்.
தனுஷின் 3 படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்தார். சின்னத்திரையில் இருந்து வந்தவர் என்றாலும், அவர் மீது திரை உலகமும், ரசிகர்களும் நம்பிக்கை வைத்தனர். பல ஊடகங்கள் அவரை “இந்த” டிவியின் பிராண்ட் எனச் சொல்வது வழக்கம்.
இன்னும் சில மாதங்களுக்கு முன்வரை அந்த தொலைக்காட்சியுடன் அவருக்கு நல்ல உறவு இருந்தது. அவர் படங்களுக்கான ப்ரமோஷன்களுக்காக அங்கு சென்று பேட்டிகளும் அளித்து வந்தார். ஆனால் தற்போது, அவரை அதே சேனல் புறக்கணிக்கிறதுபோல் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
குட்டி தளபதி நேரடி தாக்கம்
சமீபத்தில் ஈரோடு மகேஷ் தனது பேச்சில் “அண்ணா அண்ணா” என்று சொல்பவர்கள் பின்னர் “ப்ரோ” என்று மாறுவார்கள் என கூறி, பெயர் சொல்லாமல் ஒருவரை குறிவைத்தார். பலரும் இது சிவகார்த்திகேயனுக்கே எதிரான தாக்கமாக இருந்தது என்று கருதினர். இதனால் அவர்களுக்கு இடையே ஏதேனும் மனவருத்தம் இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.
அதே சேனல் நடத்தும் ரியாலிட்டி ஷோவில், ஒரு நடிகர் கூறிய “துப்பாக்கிய புடிங்க சிவா” என்ற டைலாக்கை கலாய்த்து பேசப்பட்டது. இதுவும் பர்சனல் அட்டாக் போலவே இருந்தது. “நீங்க துப்பாக்கி மாதிரி ஏதாவது ஒன்னு பண்ணுங்க, இல்லன்னா துப்பிர போறாங்க…” என குரேஷி கூறியது எதிர்வினையை ஏற்படுத்தியது.
முன்பு பக்கம் பக்கமாக சிவகார்த்திகேயனை பற்றி செய்திகளை வெளியிடும் அந்த சேனல், தற்போது அவரைப் பற்றி பேசுவதே இல்லை. இதனால், இருவருக்குள் ஏதேனும் மனக்கசப்பு உருவானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ரசிகர்களிடையே பரபரப்பையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.