Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் கைவசம் தற்போது பராசக்தி மற்றும் மதராசி படங்கள் இருக்கிறது. இதில் மதராசி படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்த்த நிலையில் தாமதமாகி கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம் அனிருத் தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது சிவகார்த்திகேயன் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார் அனிருத். அதுவும் இவர்களது காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் மதராசி படத்தில் இணைந்திருக்கின்றனர்.
ஆனால் அனிருத் வேறு படங்களிலும் செம பிசியாக இருக்கிறார். லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் கூலி மற்றும் கிங்டம் ஆகிய படங்களில் வேலைகளில் இப்போது அனிருத் இறங்கி இருக்கிறார். விஜய் தேவர் கொண்டாவின் கிங்டம் படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது.
அனிருத்தால் தாமதமாகும் சிவகார்த்திகேயன் மதராசி
அதேபோல் கூலி படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. ஆகையால் இந்த படங்களில் வேலைகளை சீக்கிரம் முடித்து கொடுக்க வேண்டும் என்பதால் மதராசி படத்தை டீலில் விட்டு விட்டார். ஆகையால் முதல் சிங்கிள் வெளியாவதற்கு தாமதமாகவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர்.
மேலும் மதராசி படம் செப்டம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என்று அறிவித்திருக்கின்றனர். ஆகையால் இந்த படங்களை முடித்த கையோடு அனிருத் மதராசி படத்தின் வேலைகளை கையில் எடுக்க இருக்கிறார்.
ஆனாலும் அனிருத் மதராசி படத்தை அலட்சியமாக டீலில் விட்டதால் சிவகார்த்திகேயனுக்கு வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் இவர்களது கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைவது கடினம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.