Kannappa Review : முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ், சரத்குமார், பிரமணந்தம் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கிறது கண்ணப்பா. சிவ பக்தரான கண்ணப்ப நாயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு வேடனாக இருக்கும் கண்ணப்பா ஆரம்பத்தில் இறை பக்தியில் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் நிலையில் சிவன் மீது தீவிர பக்தி கொள்கிறார். அதுவும் தனது கண்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் அளவுக்கு மாறுகிறார்.
புராண கதையாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவும் பிரபாஸ் கேமியோ கதாபாத்திரத்தில் ருத்ராக வரும் காட்சி தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது. ஸ்டீபன் தேவசியின் பின்னணி இசை அற்புதம்.
கண்ணப்பா படத்தின் முழு விமர்சனம்
பிரமணந்தம் மற்றும் சப்தகரியின் காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. படத்திற்கு பிளஸ் என்னவென்றால் கிளைமாக்ஸ் காட்சியில் விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு அபாரமாக இருக்கிறது. பிரம்மாண்ட நடிப்பு பட்டாளம் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
அக்ஷய குமாரின் சிவன் வேடம் கம்பீரமாக இருக்கிறது. பிரபாஸின் காட்சி படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தை கொடுத்திருக்கிறது. படத்தில் மைனஸ் என்றால் விஎஃப்எக்ஸ் காட்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மோசமான விஎஃப்எக்ஸால் ஒரு நல்ல அனுபவம் கெடுகிறது.
இரண்டாவதாக படத்தின் நீளம் 2.5 மணி நேரமாக இருக்கும் நிலையில் முதல் 2 மணி நேரமுமே படத்தின் ஆக்சன் மற்றும் பிற காட்சிகள் தான் அமைந்திருக்கிறது. கடைசி அரை மணி நேரத்தில் தான் கடவுள் உணர்வைப் பற்றி மையப்படுத்தி உள்ளனர்.
மேலும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள இடங்கள் பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்க்கப்படவில்லை. சிவபெருமான் பக்தர்கள் மற்றும் புராணக் கதை ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல அனுபவத்தை கொடுக்கும்.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5