Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதாவின் கல்யாணத்திற்கு முத்து சம்மதம் கொடுக்கவில்லை என்ற வருத்தத்தில் மீனா இருக்கிறார். மீனாவின் வருத்தத்தை புரிந்து கொண்ட அண்ணாமலை, முத்து மனசு சீக்கிரத்திலேயே மாறிவிடும். நிச்சயம் உன் தங்கச்சி ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் நடக்கும், உன்ன மாதிரி அவளும் சந்தோசமாக இருப்பாள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதைக் கேட்ட விஜயா, முத்து சம்மதிக்கலைன்னா என்ன, உன் தங்கச்சியை ஓடிப் போய் கல்யாணம் பண்ண சொல்லு என சொல்கிறார். உடனே அண்ணாமலை, மற்ற பொண்ணுங்க மாதிரி மீனாவையும் சீதாவையும் நினைத்து விட்டாயா? குடும்பத்திற்கு எதிராக எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டாங்க, முத்துவுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்னு கூட நினைக்க மாட்டாங்க என்று மீனாவை பெருமையாக சொல்கிறார்.
இதை கேட்டதும் மீனாவுக்கு குற்ற உணர்ச்சியாகிவிட்டது, அந்த சமயத்தில் சீதா மீனாவிற்கு ஃபோன் பண்ணி முத்து மாமா வீட்டுக்கு வந்து எனக்கு அருணுக்கும் கல்யாணத்துக்கு சம்மதம் கொடுத்து விட்டார் என்று சொல்கிறார். உடனே மீனா இந்த விஷயத்தை சந்தோஷமாக அண்ணாமலையிடம் சொல்லி ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகிறார்கள்.
வீட்டிற்க்கு வந்த முத்துமிடம் திடீரென்று உன் மனது மாறுவதற்கு என்ன காரணம் என அண்ணாமலை கேட்கிறார். அப்பொழுது யாரோட வாழ்க்கையும் முடிவெடுக்கும் பொறுப்பில் நம்மிடம் இல்லை, அவங்கவங்க வாழ்க்கையை அவங்களுக்கு வாழ உரிமை இருக்கிறது என்று கண்ணதாசன் பாடல்கள் மூலம் நான் தெரிந்து கொண்டே. அதனால் சீதா ஆசைப்பட்ட மாதிரி அருணுக்கும் சீதாவிற்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க முடிவு பண்ணி விட்டேன் என்று சொல்கிறார்.
இதைத் தொடர்ந்து முறைப்படி சீதா வீட்டிற்கு அருண் மற்றும் அவருடைய அம்மா பொண்ணு பார்க்க வருகிறார்கள். அப்பொழுது வீட்டிற்கு பெரியவராக இருக்கும் அண்ணாமலையும் வந்திருக்கிறார். கல்யாணம் பேச்சு எல்லாம் ஆரம்பித்த நிலையில் அண்ணாமலை, அருனிடம் இந்த கல்யாணத்தில் நீங்கள் ஏதாவது எதிர்பார்க்கிறாய் என்று கேட்கிறார்.
அதற்கு அருண் என்னுடைய கல்யாணத்திற்கு டிபார்ட்மெண்டில் இருந்து நிறைய பேர் வருவாங்க, அதனால் எந்தவித மரியாதை குறைச்சலும் நடந்து விடக்கூடாது. அதற்காக என்னுடைய கல்யாணத்தில் யாரும் குடிக்க கூடாது, இது மட்டும் தான் என்னுடைய கண்டிஷன் என்று முத்துவை பார்த்து சொல்கிறார். இப்படி சொன்னதும் முத்துவுக்கு கோபமும் வருகிறது ஆனாலும் சீதாவின் கல்யாணத்திற்காக அமைதியாகி விடுகிறார்.
இப்பொழுது இரண்டு பேரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த மீனா இரண்டு பக்கமும் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் ஏற்கனவே ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்து முடிந்து விட்டது என்று தெரிந்தால் முத்து என்ன ரியாக்ஷன் கொடுப்பாரோ என்று தெரியாமல் பயத்திலேயே மீனா தவித்து வருகிறார்.