Gossip: கோலிவுட் வட்டாரத்தில் இப்போது பரபரப்பை கிளப்பி வரும் விவகாரத்தில் பல விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் மூன்றெழுத்து நடிகை ஒருவரின் பெயர் அடிபட்டு வருகிறது.
அதேபோல் ஒரு நட்சத்திர ஜோடியும் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். திரை பிரபலங்கள் புது கலாச்சாரத்துக்கு அடிமையானது எப்படி என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.
ஆனால் வடமாநிலத்தில் இருந்து வந்த ஒரு நடிகை கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கத்தை இங்கு பரப்பி விட்டார் என்கின்றனர். அதேபோல் சாக்லேட் பாய் நடிகரும் இந்த வேலையை சத்தம் இல்லாமல் செய்து இருக்கிறார்.
இசையமைப்பாளரின் நைட் பார்ட்டி ரகசியம்
இந்த மருந்தை நைட் பார்ட்டியில் தான் பிரபலங்கள் அதிகம் பயன்படுத்துவார்களாம். சில நடிகர்கள் தங்கள் வீட்டில் நடத்தும் பார்ட்டிகளில் கூட இதை விநியோகிப்பதை ஒரு வேலையாக வைத்திருக்கின்றனர்.
அப்படித்தான் இசையமைப்பாளர் ஒருவர் சீனியர் நடிகை ஒருவருடன் நெருக்கம் காட்டி இருக்கிறார். இருவரும் நைட் பார்ட்டிக்கு போன இடத்தில் ஓவராகவே நெருங்கி இருக்கின்றனர்.
எல்லாம் உள்ளே போன மருந்து செய்த வேலை தான். சுற்றி இருந்தவர்கள் அவர்களின் நெருக்கத்தை பார்த்து பயந்து போய் அந்த ஜோடியை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்குள் படாத பாடு பட்டு விட்டார்களாம்.
தற்போது இந்த சர்ச்சை விவகாரத்தில் ஒரு இசையமைப்பாளரின் பெயரும் அடிபடுகிறது. எப்போது அவர் சிக்குவாரோ என்ற பீதியும் மற்றவர்களுக்கு உள்ளது.