Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி தன் மகளாக வீட்டிற்கு வந்துவிட்ட சந்தோசத்தில் பாண்டியன், அரசிக்கு பிடித்த சாப்பாடு வாங்கிட்டு வந்து அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது பாண்டியன், மகளுக்கு ஓட்டி விட்டு மருமகளுக்கும் சாப்பாடு கொடுக்கிறார்.
இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாக சாப்பிட்டு முடித்துவிட்டு குழலி அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். பிறகு பாண்டியன், அரசியை கூப்பிட்டு முடிஞ்சு போன விஷயத்தைப் பற்றி எதையும் யோசித்து கவலைப்படாத. நீ ஆசைப்பட்ட மாதிரி படித்து நல்ல வேலையில் சேர வேண்டும். அதுதான் உன்னுடைய லட்சியமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இந்த அளவுக்கு நீ துணிச்சல் உடன் குமரவேலு கூப்பிட்டதும் போனதற்கு காரணம் என்ன. உன்னை யாராவது இப்படி போக சொன்னார்களா என்று கேட்ட பொழுது தங்கமயில் இந்த மாதிரியான ஐடியா எல்லாம் நண்பர்கள் தான் கொடுப்பாங்க. அதனால் அரசிக்கும் அவளுடைய தோழிகள் யாராவது இப்படி ஐடியா கொடுத்திருப்பாங்க என்று சொல்கிறார்.
உடனே மீனா, ராஜிடம் நாம் உண்மையை சொல்லிவிடலாம் என்று இரண்டு பேரும் எழுந்துக்கிறாங்க. அப்பொழுது ராஜி, அரசி இந்த மாதிரியான வேலை எல்லாம் செஞ்சதற்கு ஒரே ஒரு ஆளு தான் காரணம். அந்த ஆளும் நம்மளுடைய குடும்பத்தில் தான் இருக்கிறார், அவங்க யாருன்னு எங்களுக்கு தெரியும் என்று ராஜி சொல்கிறார். உடனே எல்லோரும் அதிர்ச்சியாகி யார் என்று கேட்கிறார்கள்.
அப்பொழுது மீனா, சுகன்யாவை பார்த்து கையை காட்டி இந்த சித்தி தான் எல்லாத்துக்கும் காரணம். அரசி வாழ்க்கை குட்டிச் சுவராக போனதற்கு இவங்க தூண்டிவிட்டது தான் காரணம். கல்யாணத்துக்கு முதல் நாள் போட்டோவை வைத்து மிரட்டி அரசியே அந்த இடத்திற்கு போக சொன்னது இந்த சுகன்யா தான். அதுமட்டுமில்லாமல் படத்துக்கு குமாருடன் போவதற்கு இவங்கதான் காரணம்.
காலேஜில் விடப் போகும்பொழுது அங்கே குமார் வந்ததற்கும் இவங்கதான் காரணம். அத்துடன் அடிக்கடி அரசி மனதில் குமார் தான் உனக்கு ஏற்ற ஜோடி. அவனை கல்யாணம் பண்ணினால் இந்த ரெண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்து விடும். உங்க அப்பா சொன்ன மாப்பிள்ளையே கல்யாணம் பண்ணிக்காத, குமார கல்யாணம் பண்ணிக்கோ என்று அடிக்கடி தூண்டி விட்டதும் இவங்கதான் என்று எல்லா உண்மையும் மீனா ராஜி போட்டு உடைக்கிறார்கள்.
இதை கேட்டு அதிர்ச்சியான குடும்பம் மற்றும் பழனிவேலு, சுகன்யாவை பார்த்து நீ அரசிக்கு அத்தையா இல்ல வேறு எதுவுமா என்று திட்ட ஆரம்பிக்கிறார். கோமதியும் உச்சகட்ட கோபத்தில் சுகன்யாவை அடிப்பதற்கு போகிறார். அந்த வகையில் பழனிவேலு எனக்கு இனி இவள் வேண்டாம் என்று சுகன்யாவை வீட்டை விட்டு அனுப்பப் போகிறார். பழனிக்கு ஏத்த ஜோடியாகவும் அரசி வாழ்க்கையை சரி செய்யும் விதமாக இவர்கள் தான் ஒன்று சேரப் போகிறார்கள்.