சசிகுமார் 1999 ஆம் ஆண்டு நடிக்க வந்த போதிலும் இவருக்கு நடிகராய் அவதாரம் கிடைத்த படம் 2008ஆம் ஆண்டு வெளிவந்த சுப்பிரமணியபுரம் தான். இந்த படத்தில் பரமன் கதாபாத்திரம் மதுரை முழுக்க பட்டையை கிளப்பியது. விக்ரம் நடித்த சேது படத்தில் அவரது நண்பனாக நடித்திருந்தார்.
இயக்குவதில் கவனம் செலுத்தி வந்த சசிகுமார் சுப்ரமணியபுரம் ஈசன் போன்ற படங்களை இயக்கினார். அது மட்டும் இன்றி போராளி. தாரை தப்பட்டை. கொடி வீரன் போராளி. போன்ற படங்களை தயாரித்தும் நல்ல லாபத்தை பெற்றார்.
ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு பட கதைகளை இயக்கலாம் என யோசித்த அவரை இப்பொழுது காலம் வேறு பாதையில் பயணிக்க செய்துள்ளது. இப்பொழுது சசிகுமார் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. கடைசியாக இவர் இயக்கிய படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ஈசன் படம் தான். அதன் பிறகு இவர் அதிலிருந்து வெளிவந்துவிட்டார்.
2008 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேல் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரத்தில் ஆரம்பித்த இவர் கேரியர் இன்று வரை சோடை போகவில்லை. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். நாடோடிகள், சுந்தர பாண்டியன், கிடாரி என இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இப்பொழுது இவர் நடிக்கும் கதைகள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த, அயோத்தி, கருடன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. இப்பொழுதும் இவர் நடிப்பில் Freedom என்று ஒரு படம் வெளியாக உள்ளது. அதுவும் இவருக்கு ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தைப் பற்றி சிலாகித்து வருகிறார்கள். இயக்கும் எண்ணம் இருந்த அவருக்கு இப்பொழுது நடிக்கும் எண்ணமே மேலோங்கி இருக்கிறது.