Sun Tv : பொதுவாகவே தீபாவளி, பொங்கல் பண்டிகையை போல சுகந்திர தினம் போன்ற சில விடுமுறை நாட்களிலும் புதிய படங்களை தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வருடமும் எதிர்பார்த்த பல படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் காலை 10:30 மணிக்கு மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படம் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு விஜய் டிவி நடிகர் ரியோ நடிப்பில் காதல் படமாக வெளியான ஸ்வீட் ஹார்ட் படத்தை ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர்.
மேலும் மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அமரன் படம் வெளியாக இருக்கிறது. அதேபோல் ஜீ தமிழிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாலை 3:30 மணிக்கு சூரியின் நடிப்பில் வெளியான மாமன் படத்தை ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர்.
சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகும் படங்கள்
மாமன் படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் சமீபத்தில் தான் ஓடிடியில் வெளியானது. இப்போது மிக விரைவிலேயே சின்னதிரையிலும் வெளியாக இருக்கிறது. மேலும் சன் டிவியில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படம் வெளியாகிறது.
மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படம் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக கலைஞர் தொலைக்காட்சியில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான விடுதலை 2 படம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் ஷாம் சிங்கா ராய் படம் வெளியாக இருக்கிறது. ஆகையால் சின்னத்திரை தொலைக்காட்சியில் போட்டி போட்டுக்கொண்டு படங்களை வெளியிடுகின்றனர். ஆகையால் எந்த படம் அதிக டிஆர்பி பெறும் என்பது படம் வெளியானால் தெரியவரும்.