Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவை பழிவாங்கி இனியாவை வீட்டிற்குள்ளேயே முடக்க வேண்டும் என்று சுதாகர் பிளான் பண்ணினார். அதற்கு ஏற்ற மாதிரி ஒரு நபரை கூப்பிட்டு பாக்யாவின் ஹோட்டலுக்கு ஆடர் கொடுக்குற மாதிரி போக சொன்னார். அவரும் பாக்கியாவிடம் சென்று என்னுடைய மகளுக்கு கல்யாணம் என்று சமைக்க சொல்லி அட்வான்ஸ் ஆக 50,000 பணத்தை கொடுத்துட்டு வந்தார்.
ஆனால் அதன்பின் 50,000 ரூபாய் கொடுக்கவில்லை, அஞ்சு லட்ச ரூபாய் கொடுத்தேன் என்று மாத்தி பேசும் அளவிற்கு பாக்யாவுக்கும் ஹோட்டலுக்கும் பிரச்சினை ஏற்படுத்த தயாராகி விட்டார். அந்த சமயத்தில் கோபி அங்கே இருந்ததால் பாக்யாவிற்கு சப்போர்ட்டாக பேச ஆரம்பித்தார். உடனே எழில் செழியன் மற்றும் இனியா என அனைவரும் வந்து விட்டார்கள்.
செல்வி அக்கா 50 ஆயிரம் ரூபாய் தான் இந்த நபர் கொடுத்தார் என்று சொன்னார். ஆனாலும் செல்வி அக்கா, பாக்யா சம்பந்தப்பட்ட ஒரு ஆள் என்பதால் ஆதாரமாக எடுக்க முடியாமல் போய்விட்டது. உடனே அந்த நேரத்தில் லோக்கல் கவுன்சிலர் இருந்தார் என்று செல்வி அக்கா ஐடியா கொடுத்ததும் லோக்கல் கவுன்சிலரை வர சொல்லலாம் என்று போன் பண்ணுகிறார்.
ஆனால் அவர் ஏதோ மீட்டிங் இருந்ததால் அவரால் பேச முடியாமல் போய்விட்டது. பிறகு இனியா எந்த மண்டபம் எப்பொழுது கல்யாணம் என்று கேள்வி கேட்டு ஆரம்பித்ததும் போலீஸிடம் அந்த நபர் மாட்டிக் கொண்டார். உடனே அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் பாக்யாவுக்கும் ஹோட்டலுக்கும் பிரச்சினை எதுவும் இல்லாமல் போய்விட்டது.
இருந்தாலும் இதற்கு பின்னணியில் இருந்து அந்த நபரை தூண்டி விட்டது சுதாகர் தான் என்று எழில் கண்டுபிடித்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லுகிறார். தற்போது பாக்கியாவிற்கு என்ன பிரச்சனை வந்தாலும் குடும்பமாக நின்று அனைவரும் சப்போர்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் சுதாகர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று இனியாவிற்கு தெரிந்ததும் பத்திரிகை மூலம் சுதாகரின் குடும்பத்தை பற்றி சொல்லி அனைவரது முன்னாடியும் சுதாகரின் முகத்திரையை கிழிப்பதற்கு இனியா தயாராகி விட்டார். இனி சுதாகரின் சாப்டர் க்ளோஸ், அடுத்ததாக ஆகாஷ் ஐஏஎஸ் எக்ஸாம் எழுதி பாஸாகிடுவார். அதன் பின் இனியாவிற்கும் ஆகாசுக்கும் கல்யாணம் நடத்தி வைப்பார்கள்.