Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தான் எடுத்த அவசர முடிவால் தான் இனியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என்று கோபி, பாக்யாவிடம் புலம்புகிறார். நீ சுதாகர் குடும்பம் வேண்டாம் என்று எத்தனையோ முறை சொன்னாய். ஆனால் உன்னை நம்பாமல் அந்த சுதாகர் குடும்பத்தை நம்பி நம் உன்னுடைய வாழ்க்கையே பாழாகி விட்டேன் என்று சொல்கிறார்.
ஆனால் இனி சின்ன தவறுடன் நடக்காது, இனியாவின் வாழ்க்கையை நான் சரி பண்ணுகிறேன் என்று சொல்லிட்டு வீட்டுக்கு வருகிறார்கள். வந்ததும் ஜெனி, அவங்க பண்ணினது ரொம்ப தப்பு அவங்க மீது போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் அதெல்லாம் இப்பொழுது வேண்டாம் என்று தடுத்த நிலையில் சுதாகர் பேசிய வார்த்தையும் சந்திரிகா திமிராக நடந்ததையும் பற்றி கோபி சொல்கிறார்.
பிறகு இனியவை சமாதானப்படுத்தி விட்டு போய் ஆறுதல் சொல்கிறார். இனியாவின் வாழ்க்கை நினைத்து கோபி ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் நித்தீஷ் எப்படியும் இரண்டு நாட்களுக்குள் வெளியே வந்து விடுவான் என்று சுதாகர் சந்திரிகாவிடம் சொல்கிறார். பிறகு இனியாவிடம் போய் எப்படியாவது சமாதானம் பேசி வீட்டிற்கு கூட்டிட்டு வரணும் என்று சுதாகர் சொல்கிறார்.
ஆனால் சந்திரிகா அந்த திமிர் பிடித்த குடும்பம் ரவுடித்தனத்தை காட்டிட்டு போனாங்க. அவங்க வீட்டு பொண்ணு நமக்கு தேவை இல்லை. நித்தேசுக்கு வேற கல்யாணம் பண்ணுவோம், அதுவும் முடியவில்லை என்றால் தனியாகவே இருக்கட்டும். ஆனால் அந்த இனிய மட்டும் வேண்டவே வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் சுதாகர், இனியா நம்முடன் இருந்தால் தான் சரியாக இருக்கும்.
நித்தேசுக்கு அதுதான் பாதுகாப்பாக இருக்கும், அதனால் நித்தீஷ் வெளியே வந்ததும் நீயும் நானும் கோபி வீட்டிற்கு போய் பேசிட்டு வரவேண்டும் என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக கோபி குடும்பத்தில் அனைவரும் இந்த ஒரு விஷயத்தை நினைத்து பீல் பண்ணி பேசும் பொழுது இனியா, எனக்கு பெருசாக நித்தேஷ் மீது எந்த அபிப்பிராயமும் இல்லை. நாங்கள் யூரோப்புக்கு போன அந்த இரண்டு நாட்கள் மட்டும் தான் சந்தோஷமாக இருந்தோம்.
திரும்பி இங்க வந்ததுமே அவருடைய சுயரூபம் தெரிந்துவிட்டது, அந்த குடும்பத்தை பற்றியும் எனக்கு புரிந்து விட்டது. அதனால் இந்த ஒரு விஷயம் என்னை பெருசாக பாதிக்கவில்லை என்று சொல்கிறார். பிறகு விஷயத்தை கேள்விப்பட்ட எழிலும் வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது இனியா, என்னுடைய வாழ்க்கை சம்பந்தமான ஒரு முடிவை நான் தனியாக எடுத்து இருக்கிறேன்.
எனக்கு இனி நித்தீஷ் வேண்டாம், அதனால் அவரை விவாகரத்து பண்ணலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன் என சொல்கிறார். இதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியாக நிலையில் இனியா சொன்னதற்கு சம்மதமும் தெரிவித்து விடுவார்கள். இந்த வகையில் இனி இனியாவிற்கு சப்போர்ட்டாக பாக்யாவின் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆறுதலாக நிற்பார்கள்.