குணசேகரன் வீட்டில் நடந்த மோதலில் பார்கவியின் தந்தை குருநாதன் இறந்துவிட்டார். இதனால் குற்ற உணர்ச்சியில் ஈஸ்வரி , நான் தான் இதற்கு காரணம் அவர்களை இங்கு வரவழைத்தது இப்படி அநியாயமாக கொன்று விட்டேன் என புலம்பித் தள்ளுகிறார்.
வீட்டில் கொழுந்துவிட்டு எரிந்த ஜனனி, குணசேகரனின் வலது கையான கதிர் கண்ணத்தில் அறைந்து விட்டார் . உங்களை சும்மா விடமாட்டேன், இனிமேல் நீங்கள் அனைவரும் கம்பி எண்ண வேண்டும் என ஆவேசமாக மருத்துவமனைக்கு புறப்படுகிறார்கள். அங்கே சென்றவர்களை பார்ப்பதற்கே பயப்படுகிறார் பார்கவி.
மருத்துவமனையில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே குணசேகரன் முந்திக் கொள்கிறார். ஒரு போலீஸ் படையே மருத்துவமனைக்கு வருகிறது, வந்தவர்கள் ஜீவானந்தம், பார்கவி மற்றும் அவரது தந்தையை கைது செய்யப் போறோம் என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள் மூவர் மீதும் தர்ஷனை கடத்திய வழக்கு இருக்கிறது. அதனால் நாங்கள் கைது செய்வோம் என மல்லு கட்டுகிறார்கள் காவல்துறை. மறுபக்கம் ஜனனி நீங்கள் ஒரு பக்கமாக நடந்து கொள்கிறீர்கள் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என போலீசிற்கு பதிலடி கொடுக்கிறார்.
அதற்கு முன்னர் நாங்கள் கம்ப்ளைன்ட் கொடுக்கிறோம் பார்கவியின் தந்தை இறந்ததற்கு காரணம் குணசேகரன், அறிவுக்கரசி மற்றும் அவரது அடியாட்கள் என ஜனனி பதில் கொடுக்கிறார். இந்த கம்பளைண்டை நீங்கள் எடுக்காவிட்டால் எந்த எல்லைக்கும் சென்று நான் ஒரு கை பார்த்து விடுவேன் என காவலர்களுக்கு செக் வைக்கிறார்..