Suriya: நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் கருப்பு படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தை பற்றி ஏற்கனவே நிறைய வியூகங்கள் எழுந்து வந்தன.
மேலும் இந்த படத்தின் கதையை ஆர்.ஜே பாலாஜி முதலில் விஜய்க்கு சொன்னதாகவும், அவர் மறுத்ததால் தற்போது இந்த கதை சூர்யாவிடம் கிடைத்திருப்பதாகவும் கூட பேசப்பட்டது. உண்மையில் இது விஜய்க்காக சொன்ன கதை இல்லை, நயன்தாராவுக்காக எழுதிய கதை.
நயன்தாராவுக்காக எழுதப்பட்ட கதை
அது எப்படி ஹீரோயினிக்காக எழுதிய கதையில் ஹீரோயின் அடிக்க முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். அங்கே தான் தன்னுடைய ஒட்டு மொத்த திறமையையும் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.
ஆர்.ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகமாக எழுதிய கதை தான் இது. அதாவது மூக்குத்தி அம்மன் 2000 வருஷத்திற்கு பிறகு போலீசாக பூமியில் பிறந்து, அநியாயத்தை தட்டி கேட்டால் எப்படி இருக்கும் என்ற கதை.
ஒரு சில காரணங்களால் மூக்குத்தி அம்மன் இரண்டு ஆர் ஜே பாலாஜி பண்ண முடியவில்லை. உடனே இந்த கதையை 2000 வருஷத்திற்கு முன்பு வாழ்ந்த கருப்பசாமி, தற்போது மனிதனாகப் பிறந்து வக்கீலாக வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பது தான் கதை.
கருப்பு மற்றும் வக்கீல் கேரக்டரில் சூர்யா இருந்ததால் அவர் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது. சாமி மற்றும் வக்கீல் கேரக்டர் தான் இந்த இரண்டு கெட்டப்புகள்.
ஹீரோயினிக்காக எழுதிய கதையை பட்டி டிக்கரிங் பார்த்து சூர்யாவுக்காக மாற்றி இருக்கிறார். ஒரு இயக்குனராக ஆர் ஜே பாலாஜி இதுவரை தோற்றதில்லை என்பதால் சூர்யாவின் ரசிகர்களுக்கு அவர் மீது அலாதி நம்பிக்கை இருக்கிறது.