Surya : சினிமாவில் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கும் நடிகர் சூர்யா. இன்று பல ரசிகர்கள் கூட்டம் இவருக்கென்று உருவாகியுள்ளது. தனது தந்தை வழியில் இல்லாமல் தன்னுடைய முயற்சியாலே சினிமாவில் ஜெயித்துக் காட்டியவர்.
தமிழ்நாடு மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் இவருக்கு என பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். தற்போது சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் அப்டேட் தான் அவ்வபோது வந்து கொண்டே இருக்கிறது.
சூர்யாவின் அத்தியாயம்..
சூர்யாவை வைத்து #Surya45 ஆர்.ஜே பாலாஜி படத்தை இயக்குகிறார் என்று கேள்விப்பட்டதுமே பாலாஜி இந்த அளவுக்கு உயர்ந்து விட்டாரா என்று பல பாராட்டுமழைகள் அவருக்கு குவிந்தது. மிகவும் ஆர்வத்துடன் திரைப்படத்தை இயக்கினார்.
திரைப்படத்தை இயக்கிய முடித்த கையோடு கருப்பு என்று பெயர் சூட்டினார். சூர்யா நடிக்கும் 45 வது திரைப்படத்திற்கு கருப்பு என்று பெயர் வைத்துள்ளது வித்தியாசமாக இருக்கிறதே என்று பலரும் திகைத்தனர். நிச்சயம் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என ப்ரஸ் மீட்டிங்கில் RJ பாலாஜியும் கூறினார்.
இந்நிலையை நடிகர் ஆர் கே சுரேஷ் பேட்டி கொடுத்திருப்பது, சூர்யாவின் ரசிகர்களையே ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துள்ளது.
” நல்லது பண்ண வேண்டும் என்று சூர்யா அகரம் பவுண்டேஷனை தொடங்கி பல மாணவர்களுக்கு நல்லது செய்து வருகிறார். நிறைய பேர் இதற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களும் நிறைய பேர் செய்து வருகின்றனர். ஒரு படம் என்றால் அவருடைய படம் நல்லா இல்லை என்று சொல்வது கருத்து சுதந்திரம் கிடையாது.
கமல் சார் விக்ரம் சாருக்கு பிறகு ரசிக்கக்கூடிய கூட்டங்கள் சூர்யாவிற்கு மட்டுமே இருக்கிறது. நிச்சயம் கருப்பு திரைப்படம் நல்ல விஷயம் கொடுக்கும்- ஆர் கே சுரேஷ்“. இவருக்கு சூர்யா படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்தால் போதும் உடனே பயங்கரமான சப்போர்ட் கொடுத்து விடுவார். ஆர்கே சுரேஷ் சொல்லும் அளவிற்கு படம் நல்லா இருக்குமா என்பது வெளியான பிறகு தான் தெரியும்.