அப்பா காலத்தில் இருந்து சினிமாவைப் பற்றி நன்கு அறிந்த குடும்பம். ஜெயம் ரவியும் 15 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறார். இன்று தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி இருக்கும் நிலைமை கொஞ்சம் டல் தான். எல்லாத்தையும் நன்கு அறிந்தவர் ஜெயம் ரவி என்ற ரவி மோகன்.
தமிழில் நூற்றுக்கணக்கான படங்கள் வியாபாரமாகாமல் தத்தளித்து வருகிறது. ஏன் ஜெயம் ரவியின் படம் கூட வியாபாரமாகாமல் கிடைக்கிறது. இண்டஸ்ட்ரியல் ஓ டிடி, டிஜிட்டல் என எல்லாத்துக்கும் செக் வைத்து விட்டார்கள். பழைய மாதிரி அவர்களின் நிலைமையும் இல்லை.
இப்பேற்பட்ட நிலைமையில் ஜெயம் ரவி தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என அதற்கு பெயர் வைத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக மூன்று படங்கள் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா மற்றும் ரவி மோகன் சேர்ந்து நடிக்கும் ஒரு படம், யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் மற்றொரு காமெடி கலந்த கதைக்களம். ஜெயம் ரவி தானே இயக்கி, தயாரிக்கப் போகும் மற்றும் ஒரு படம், என இப்படி மூன்று படங்களுக்கு முதற்கட்டமாக அடித்தளம் போட்டு உள்ளார்
ஜெயம் ரவியின் நிலைமையை இப்பொழுது சரி இல்லை, எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை, இப்படி இருக்கும் நேரத்தில் பெரிய லெவலில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறாரே என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. ஜெயம் ரவிக்கு நண்பர்கள் வட்டாரம் ஜாஸ்தியாம்.
அவர் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை காரணமாக பிரிந்து இருக்கும் நேரத்தில் தனியாக மும்பை மற்றும் கோவாவில் வீடு வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெரிய நட்பு வட்டாரம் இருக்கிறது ஜெயம் ரவிக்கு. இப்பொழுதும் வெளிநாட்டில் இருக்கும் தனது நண்பரான பெரிய பைனான்சியர் தான் அவருக்கு உதவி வருகிறார்.