அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அஜித்தின் குட் புக்கில் இடம் பெற்று விட்டார் ஆதிக். இவர் தீவிரமான அஜித் ரசிகர் என்பதாலேயே அவருக்காக மாஸ் கதைகளை உருவாக்கி வருகிறார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் திணறி வந்தனர். அஜித் கேட்ட 210 கோடி ரூபாய் சம்பளத்தால் மைத்திரி மூவி மேக்கர்ஸ், ஐசரி கணேஷ், என எந்த பெரிய நிறுவனங்களும் தயாரிப்பதற்கு முன்வரவில்லை.
இதனால் இந்த படத்தை விநியோகஸ்தர்களுள் ஒருவரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பதற்கு முன் வந்தார். ஆனால் அவரால் எப்படி 300 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டை புரட்டி இந்த படத்தை தயாரிக்க முடியும் என எல்லா பக்கத்தில் இருந்தும் கேள்விகள் வந்தது. படங்களை விநியோகம் செய்பவருக்கு ஏது இவ்வளவு பணம் என அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இப்பொழுது இந்த படத்தை ராகுல்தான் தயாரிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்கு அவர் செய்த யோசனை தான் அனைவரையும் வாயை பிளக்க செய்தது. அஜித்திடம் டீல் பேசி இந்த படத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். படத்தை 120 கோடிகளில் எடுக்க திட்டமும் போட்டுள்ளார்.
ராகுல், அஜித்திடம் இந்த படத்திற்கு தியேட்டர்களுக்கு உண்டான வியாபாரம் இன்றி டிஜிட்டல், ஓடிடி மற்ற லாபங்கள் என அனைத்தையும் அஜித்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டார். இதனால் தியேட்டரில் வரும் வருமானம் மட்டும் போதும் என ராகுல் முடிவெடுத்துவிட்டார். இப்படி செய்வதால் படத்தை 120 இல் இருந்து 130 கோடிக்குள் எடுத்து விட முடியுமாம். அஜித் தரப்பில் இதற்கு கிரீன் சிக்னலும் வந்துள்ளதாம்..