Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், காசு கொடுத்து வேலை வாங்கி சந்தோசமாக இருக்கும் மீனா மற்றும் செந்திலுக்கு ராஜி குடும்பத்தால் மிகப்பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது நியாயம் தர்மம் என்று பேசும் மீனா, எல்லாமே சட்டப்படியும் முறைப்படி தான் நடக்க வேண்டும் என்று வாய்க்கு வாய் வாதாடுவார்.
அதனால் தான் சக்திவேல் மற்றும் முத்துவேலுவின் கடைகளை க்ளோஸ் பண்ணும் அளவிற்கு சட்ட ரீதியாக எல்லா வேலையும் பார்த்தார். ஆனால் தற்போது செந்தில் பணத்தை வாரி இறைத்து அரசாங்க வேலையை வாங்குவது மட்டும் தவறு இல்லை என்று யோசிக்க மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் செந்தில் இடம் இது தவறு என்று சொல்லி இருந்தாலும், வேலை கிடைத்ததும் சந்தோஷத்தில் மீனாவும் செந்திலை கொண்டாட ஆரம்பித்து விட்டார்.
தற்போது செந்தில் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லி வேலைக்கு முதல் நாள் போவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் எல்லோரும் செந்திலுக்கு வாழ்த்துக்களை சொல்லி வழி அனுப்பி வைத்து விட்டார்கள். கதிர் செந்திலை ஆபீஸில் கொண்டு போய் விடுவதற்கு போய்க்கொண்டு இருக்கிறார். போகும் பொழுது அப்பாவை பார்த்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு போகலாம் என்று செந்தில் கடைக்கு போக சொல்கிறார்.
ஆனால் அங்கே பாண்டியன் இல்லை, கோவிலுக்கு செந்தில் பெயருக்கு அர்ச்சனை பண்ண போய்விட்டார். போகும் வழியெல்லாம் தன் மகனுக்கு வேலை கிடைத்து விட்டது என்று அலப்பறை செய்து கொண்டுதான் போகிறார். கோமதியும் வீட்டிலிருந்து செந்தில் மீனா பெயருக்கு ஆச்சரியம் பண்ண கோவிலுக்கு போய் விட்டார். பிறகு இரண்டு பேரும் கோவிலில் சந்தித்து பேசிவிட்டு கிளம்பி விடுகிறார்கள். கடைசி வரை செந்தில், பாண்டியனை பார்க்க முடியாமல் வேலைக்கு போய்விட்டார்.
அங்கே மீனா மற்றும் மீனாவின் அப்பா காத்துக் கொண்டிருந்த நிலையில் செந்தில், ஐடி கார்டு எல்லாம் வாங்கி சீட்டில் உட்காரு வரை பார்த்துவிட்டு போட்டோக்களை எடுத்து சந்தோசமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக செந்தில் வேலைக்கு சக்திவேல் உளை வைக்கப் போகிறார். லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியது தவறு என்பதன் படி செந்தில் வேலை பறிபோகப் போகிறது.
மறுபடியும் பாண்டியன் கடையில் பொட்டலம் மடிப்பதற்கு தான் செந்தில் போகப் போகிறார். இதற்கு இடையில் தங்கமயில், மீனா மற்றும் கோமதிக்கு இடையில் விரிசல் ஏற்படும்போது அதைப் பேசி பெருசாகும் அளவிற்கு தான் தங்கமயில் பேச்சுக்கள் இருந்தது. தன்னிடம் தன் குடும்பத்தின் மீது எவ்வளவு தவறு இருக்கிறது, என்னெல்லாம் பொய் சொல்லி இருக்கிறோம் என்பதை மறந்து திருந்தாமல் தங்கமயில் கர்ப்பம் என்பது வைத்து ஆட்டம் போட்டு வருகிறார்.