Rajini : ரஜினி நடிப்பில் வெளியான கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இதே நாளில் பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் 2 படமும் போட்டி போட்டது. பொதுவாகவே லோகேஷ் படங்களில் வன்முறை காட்சிகள் இடம்பெறுவது வழக்கம் தான்.
இதனால் கூலி படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தது. ஆனாலும் லோகேஷை நம்பி கலாநிதி மாறன் படத்தை வெளியிட்டு இருந்தார். படம் நல்ல வசூலை பெற்றிருந்தாலும் சிலர் குழந்தைகளை அனுமதிக்காததால் குடும்பத்துடனே கூலி படத்தை பார்க்க தவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கூலி படம் பார்க்க வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வார் 2 படத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். சில திரையரங்குகளில் வார் 2 படத்திற்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே சென்று ஹவுஸ்புல் ஆகி இருக்கிறது.
ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ள கூலி
இப்போது கூலி படக்குழு முக்கிய முடிவு எடுத்து இருக்கின்றனர். அதாவது சில மோசமான வன்முறை காட்சிகள் வெட்டப்பட்டு மீண்டும் சென்சார் போர்டுக்கு கூலி படத்தை அனுப்ப உள்ளனர். இதன் காரணமாக ஏ சர்டிபிகேட் இல்லாமல் படத்தை வெளியிட உள்ளனர்.
இதனால் குழந்தைகளும் கூலி படத்தை பார்க்க எதுவாக செய்ய இருக்கின்றனர். மேலும் படம் வெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் வெளிவர இருக்கிறது. அதில் குழந்தைகளுக்கு என்று எந்த கட்டுப்பாடும் இருக்காது. ஆனாலும் அதற்கு முன்னதாகவே தியேட்டரில் வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள்.
இதன் மூலம் கூலி படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ரஜினியின் கேரியரில் ஜெயிலர் படத்திற்கு பிறகு மிக முக்கியமான படமாக இப்போது கூலி படம் மாறி இருக்கிறது.