Thalapathy : மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு குதித்தார் விஜய்.
தமிழ்நாட்டில் மக்களுக்கு எந்த மூலையில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி மக்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்து வருகிறார் த.வெ.க விஜய்.
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித் என்ற காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரணையில் மர்மமாக உயிரிழந்தது தமிழ்நாட்டு மக்களை சோகத்திற்கு உள்ளாகியது.
இதை அடுத்து த.வெ.க கட்சியின் தலைவர் என்ற பொறுப்பில் விஜய் உயிரிழந்த அஜித் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.
“தந்தையை இழந்த இந்த குடும்பம் மட்டுமில்லை நியாயமான ஒரு குரலை இந்த சமூகம் புறக்கணிக்கிறது” என்று உருக்கமாக பேசிய விஜய் இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த அஜித் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சத்தை வழங்கியுள்ளார்.
இந்த இடத்தில் செல்ஃபி எடுக்கலாமா..??
இறந்த காவல் துறை அதிகாரியின் வீட்டில் அனைவரும் கூடி இருந்த நிலையில், ஒருவர் விஜயுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றார், விஜயும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் செல்ஃபிக்கு போஸ் கொடுத்திருக்கிறார். விஜய் உடன் அந்த நபர் எடுத்த புகைப்படம் இப்போது வலைத்தளத்தில் சுற்றி வருகிறது.