Gossip: அந்த ஹீரோ நடிக்க வந்த காலகட்டத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு ஆளானார். நடிகர் ஒன்றும் லேசுப்பட்டவர் கிடையாது. பல பேருக்கு குடைச்சல் கொடுத்திருக்கிறார்.
இந்த வயசுல இப்படித்தான் இருப்பாங்க என்று நினைத்தாலும் கூட அதையும் தாண்டி நடிகர் பல சேட்டைகள் செய்திருக்கிறார். கால் ஷீட் கொடுத்துவிட்டு நடிக்க வராமல் டிமிக்கி கொடுத்து விடுவார்.
அதனால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் இன்னொரு முறை அவரை வைத்து படம் எடுத்து கையை சுட்டுக் கொள்ள விரும்பவில்லை. இதனால் நடிகருக்கு மார்கெட் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்தது.
சேட்டை எல்லாம் ஓரங்கட்டிய நடிகர்
அதேபோல் காதல் இளவரசன் போல் நடிகர் போட்ட ஆட்டம் அவருடைய இமேஜை டேமேஜ் செய்தது. முன்னணி ஹீரோயின்கள் இவருடன் நடிக்கவே தயங்கினார்கள். இப்படி நடிகர் சில வருடங்களுக்கு முன்பு ஆடாத ஆட்டம் ஆடினார்.
ஆனால் இப்போது அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என ஒதுங்கி விட்டார். இதற்கு காரணம் தொடர் தோல்விகள் தான். அதேபோல் நடிகரின் அப்பாவுக்கும் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டது.
பெயரும் கெட்டுப் போச்சு. இதனால் யோசித்த நடிகர் சில வருடங்களுக்கு முன் அசத்தல் கம் பேக் கொடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார். இப்போது தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளையாக நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் நடிகர்.