சேரனுக்காக கார்த்திகாவை கடத்த போகும் பாண்டியன்.. நிலாவின் ஆசையை நிறைவேற்றும் சோழன் – Cinemapettai

Tamil Cinema News

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவுக்கு கல்யாண ஏற்பாடு நடப்பதால் கார்த்திகாவின் குடும்பத்தை பற்றி விசாரிப்பதற்கு மாப்பிள்ளை விட்டார்கள் வருகிறார்கள். அப்படி வரும் பொழுது சேரனிடம் தான் கேட்கிறார்கள். உடனே சேரன், கார்த்திகாவின் குடும்பம் நல்ல குடும்பம். நல்ல பொண்ணு நீங்க தாராளமாக கல்யாணம் பண்ணலாம் என்று சொல்லி விடுகிறார்.

இதை பார்த்து கடுப்பான பாண்டியன், நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று திட்டுகிறார். அதற்கு சேரன், நான் எதுவும் பண்ணவில்லை கார்த்திகா உண்மையிலேயே நல்ல பொண்ணு தான். அந்த பொண்ணுக்கு நல்ல இடமாக கிடைத்தால் சந்தோசம் தான் என்று சொல்லிவிடுகிறார். பிறகு அதே நபர், நடேசன் இடமும் விசாரிக்கிறார். உடனே நடேசன் இதுதான் சான்ஸ் என்று கார்த்திகாவின் குடும்பத்தை தவறாக சொல்லி விடுகிறார்.

இதை பார்த்து சேரன், அப்பாவை திட்டிவிட்டு அந்த நபரிடம் அவர் ஏதோ கோபத்தில் உலறுகிறார். நீங்கள் இதை பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் கல்யாண வேலையை பாருங்கள் என்று சொல்லிவிடுகிறார். இதனால் கோபப்பட்ட நடேசன் வீட்டிற்கு வந்து நிலாவிடம் புலம்புகிறார். உடனே நிலா, சேரனை பெருமையாக பேசுகிறார். அடுத்ததாக சேரன் மற்றும் சோழன் வீட்டிற்கு வரும் பொழுது கார்த்திகா வீட்டில் கல்யாணம் ஏற்பாடுகள் நடப்பதை பார்க்கிறார்கள்.

அத்துடன் ஜன்னலில் நின்று கார்த்திகா பார்ப்பதை சோழன் பார்த்து சேரனிடம் சொல்கிறார். சேரனும் ஓரக்கண்ணில் பார்த்து எதுவும் பேசாமல் வந்து விடுகிறார். ஆனால் வீட்டுக்கு வந்ததிலிருந்து கார்த்திகாவின் ஞாபகத்தில் சேரன் சில விஷயங்களில் சொதப்புகிறார். இவர் வருத்தத்தில் இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது. உடனே சோழன், சேரனை தனியாக கூப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்க வைக்கிறார்.

சேரனும் இது மது என்று தவறாக நினைத்து மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி தீர்க்கும் விதமாக கார்த்திகா மீது இருக்கும் பாசத்தையும், இந்த வீட்டிற்கு மருமகளாக வந்தால் சந்தோஷமாகவும் பார்த்துக் கொள்வேன் என்று சொல்கிறார். இப்படி சேரன் மனதில் இருப்பதை சொல்லும் பொழுது நிலா, பாண்டியன், பல்லவன் மற்றும் சோழன் அனைவரும் கேட்கிறார்கள்.

உடனே பாண்டியன், அண்ணனுக்கு சரக்கு கொடுத்து விட்டாயா என்று கேட்கிறார். அதற்கு சோழன் அதெல்லாம் நான் எதுவும் கொடுக்கவில்லை. வெறும் ஜூஸ் குடித்துவிட்டு தான் அண்ணன் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார் என்று சொல்லி அனைவரும் சிரித்துக் கொள்கிறார்கள். ஆனால் தற்போது சேரன் மனதில் என்ன இருப்பது என்று தெரிந்து விட்டதால் கார்த்திகா கல்யாணத்தை நிறுத்தும் விதமாக சேரனின் தம்பிகள், கார்த்திகாவை கடத்திட்டு வந்து சேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறார்கள்.

அந்த வகையில் சேரனுக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படும் நிலாவின் ஆசையும் நிறைவேறிவிடும். சேரனுக்கும் மனதிற்கு பிடித்த பெண்ணுடன் கல்யாணம் நடந்துவிடும். இனி நிலாவுடன் அந்த வீட்டில் கார்த்திகா மருமகளாக இருக்கப் போகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.