Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழனை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு மாமனார் மாமியார் மச்சான் என அனைவரும் மட்டம் தட்டி பேசி அவமானப்படுத்துகிறார்கள். இது எதுவும் தெரியாத நிலா, தன்னுடைய குடும்பத்தை நம்பி வருகிறார்.
அடுத்ததாக அண்ணியை கூட்டிட்டு கோவிலுக்கு நிலா கிளம்பி போய் விடுகிறார். அப்பொழுது மாமியார் குழந்தையை கூட்டிட்டு பள்ளிக்கூடம் போக வேண்டும் என்பதால் டிரைவர் யாருமில்லை என்ற ஒரு டிராமா போட்டு சோழனை டிரைவராக ஆக்க வேண்டும் என்பதற்காக மாமியாரை கூட்டிட்டு கார் ஓட்ட சொல்லுகிறார்.
இப்படி ஒவ்வொரு விஷயமும் சோழனை அசிங்கப்படுத்தும் விதமாக மொத்த குடும்பமும் கட்டடம் கட்டி வருகிறார்கள். அடுத்ததாக சேரன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே சேரனின் நண்பராக இருந்தவரின் தங்கை என்று சாந்தோணியாக ஒருவர் வருகிறார்.
இவர் தான் சேரனுக்கு ஜோடியாக போகிறார், ஆனால் இந்த குடும்பத்தையும் சேரணையும் ஆட்டிப்படைக்கும் விதமாக இவருடைய கேரக்டர் நெகட்டிவ் ஆக இருக்கப்போகிறது. இந்த சீரியல் பிளஸ் பாயிண்ட் எல்லோரும் ஒன்றாக இருப்பதும், அனைவரிடமும் பாசத்தை காட்டும் சேரனின் நடிப்பும் தான்.
ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக வந்த சாந்தோணி, எந்த அளவிற்கு சேரனுக்கு செட்டாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இன்னொரு பக்கம் பாண்டியன் வானதி லவ் போய்க்கொண்டிருக்கிறது, இவர்களுடைய கல்யாணமும் அடுத்து வரப்போகிறது.