Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழனிடம் சவால் விட்டபடி ஒரு வாரத்திற்குள் நிலாவை தன்னுடைய மகளாக வீட்டுக்கு கூட்டிட்டு போக வேண்டும் என்று மனோகர் பிளான் பண்ணிவிட்டார். அதனால் நிலா மீது இருக்கும் கோபத்தை மறைத்துக் கொண்டு சோழன் வீட்டுக்கு வந்து சகஜமாக பேசுகிறார்.
அத்துடன் நிலா மீது பாசத்தை காட்டி நல்லவர் போல் அந்த வீட்டில் சாப்பிட்டு ஒரு வாரத்திற்கு நிலவையும் சோழனையும் வீட்டிற்கு கூட்டிட்டு போவதாக சொல்கிறார். உடனே சேரனும் சரி என்று சொல்லிய நிலையில் மனோகருடன் நிலா சோழன் கிளம்பப் போகிறார்கள். ஆனால் மனோகர் கூட்டிட்டு போவதற்கு முக்கிய காரணம் நிலாவையும் சோழனையும் பிரிக்க வேண்டும் என்றுதான்.
ஆனால் நிலாவை பொருத்தவரை மனோகர் போட்ட கணக்கு எதுவும் செல்லுபடியாகாது. அடுத்ததாக பாண்டியனுக்கு ஜோடியாக வானதி கமிட் ஆகிவிட்டார். பல்லவனுக்கு காலேஜில் ஒரு லவ் ட்ராக் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக சேரனுக்கு யார் ஜோடி என்று கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் வெளிவந்த தகவலின் படி சேரனுக்கு ஜோடியாக வருபவர் தான் இந்த குடும்பத்தையே ஆட்டிப்படைக்கும் நெகட்டிவ் கேரக்டராக இருக்கப் போகிறது.
அதனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகும் வில்லி யார் என்றால் மகாநதி சீரியலில் காவேரி கங்காவின் தங்கையாக நடித்த யமுனா என்று தகவல் வெளியாயிருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் மகாநதி சீரியலை விட்டு அவர் விலகி இருக்கிறார். அதனால் கூடிய விரைவில் அய்யனார் துணை சீரியலில் வடநாட்டுக்காரி கேரக்டரில் சேரனுக்கு ஜோடியாக வரப்போகிறார்.