சைலண்டா கலெக்ஷன் பார்க்கும் குபேரா.. 3 நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் – Cinemapettai

Tamil Cinema News

Kuberaa Collection: தனுஷ் நடிப்பில் கடந்த 20ம் தேதி குபேரா வெளியானது. சேகர் கம்முலா இயக்கத்தில் ராஷ்மிகா, நாகார்ஜுனா மற்றும் பலர் படத்தில் நடித்திருந்தனர். சில கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் தியேட்டரில் பார்க்கும் ரகம் தான்.

அதனாலேயே தற்போது படத்தின் வசூலும் லாபகரமாக இருக்கிறது. முதல் இரண்டு நாட்களை பொறுத்தவரையில் குபேரா தமிழ்நாட்டில் 9.50 கோடிகளை வசூலித்துள்ளது.

தெலுங்கில் 24.10 கோடிகளும், மலையாளத்தில் 55 லட்சமும், கன்னடத்தில் 3.95 கோடிகளும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் 1.40 கோடிகளும் வசூல் ஆகி இருக்கிறது.

3 நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்

மேலும் ஓவர்சீஸ் பொருத்தவரையில் 14.20 கோடிகள் வசூல் ஆகி இருக்கிறது. ஆக மொத்தம் இரண்டு நாட்களில் மட்டுமே குபேரா உலக அளவில் 53.70 கோடிகளை கலெக்ஷன் பார்த்துள்ளது.

அதை அடுத்து விடுமுறை தினமான நேற்று இதன் வசூல் லாபமாக இருக்கிறது. அதன்படி இந்திய அளவில் குபேரா மூன்றாவது நாளில் 17.25 கோடிகளை வசூலித்திருக்கிறது.

இந்த வசூல் இந்த வாரமும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. ஆக மொத்தம் தனுசுக்கு குபேரா லக்கியான படமாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே அவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அதேபோல் வசூலும் அவரை ஹாப்பி ஆக்கியிருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.