Actor : விஜயுடன் பல துணை நடிகர்கள் இணைந்து நடித்து படத்தில் காமெடியில் கலக்கி இருப்பதை பார்த்திருப்போம். அந்த வரிசையில் துணை நடிகர் சத்தியனும் ஒருவர்.
வேட்டைக்காரன் படத்தில் விஜய் மற்றும் இவரின் காம்போ வேற லெவலில் இருக்கும். இதைத்தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் துப்பாக்கி,நண்பன் திரைப்படத்தில் விஜய் உடன் நடித்தார் சத்யன்.
தற்போதைய செய்தி..
தற்போது சத்யன் சொத்துக்களை இழந்து தவித்து வருகிறார் என்ற தகவல்கள் வலைத்தளத்தில் உலா வருவது சினிமா வட்டாரத்தில் ஒரு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
பின்னணி என்ன?
மாதம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சத்யனுக்கு எனக்கு எண்ணிலடங்காத சொத்துக்கள் இருந்தது. இவரது அப்பா மாதம்பட்டி சிவகுமார் என்று அழைக்கப்பட்டவர். சினிமா ஆர்வம் காரணமாக தனது மகனை வைத்து இரண்டு படம் இயக்கியுள்ளார். படம் தோல்வியில் முடிந்ததால் பாதி சொத்தை விற்று இழப்பை ஈடு செய்துள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல நடிகர் சத்யனின் பெயரில் இருந்த மீதி சொத்துக்களையும் தற்போது விற்று விட்டு சத்யன் சென்னைக்கு இடம்பெயர்ந்ததாக உறவினர்கள் தற்போதைய பேட்டியில் கூறி வருகின்றனர்.
சின்ன ராஜா என்று சொல்லும் அளவுக்கு நடிகர் சத்யனின் குடும்பம் இந்த ஊரில் கொடி கட்டி வாழ்ந்தது என்று உறவினர்கள் கூறி வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
வெறும் நடிகராக மட்டுமே நமக்குத் தெரிந்த துணை நடிகர் சத்யனுக்கு இவ்வளவு பெரிய பேரும், புகழும் இருக்கிறதா என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.