சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். அவரது சமீபத்திய படம் அமரன், ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, இவர் புதிய படங்களில் பிசியாக உள்ளார்.
தற்போது மதராஸி மற்றும் பராசக்தி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் எஸ்.கே. மதராஸி படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, இசையை அனிருத் வழங்குகிறார். இப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராசக்தி படத்திலும் மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டணி நடிக்க உள்ளது. அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றுகிறார்.
இரண்டு படங்களுக்கு பின், விநாயக் இயக்கும் புதிய படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சேர்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ஒன்றும் உருவாக உள்ளது. புஷ்கர்-காயத்ரி இயக்கத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
100 கோடி செலவில் புதிதாக மாடர்ன் பங்களா
இத்தனை பட ஒப்பந்தங்கள் நடந்து வரும் நிலையில், SK தற்போது ஒரு மாற்றத்திற்குள் செல்கிறார். தனது சொந்தமான பனையூரில் உள்ள வீடு இடிக்கப்பட உள்ளது. அதன் இடத்தில் ₹100 கோடி செலவில் புதிதாக மாடர்ன் பங்களா கட்ட திட்டமிட்டுள்ளார்.
அதன் காரணமாக, சிவகார்த்திகேயன் தற்போது ஈசிஆரில் உள்ள தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டிற்கு வாடகைக்கு மாற உள்ளார் என்று கூறப்படுகிறது.