Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் நிலாவுக்கு பைக்கை சர்ப்ரைஸ் ஆக வாங்கி கொடுத்து விட்டார். ஆனால் நிலாவுக்கு பைக் ஓட்ட தெரியாததால் பல்லவன் சொல்லிக் கொடுக்கிறார். அந்த நேரத்தில் நடேசன், சோழனை கூப்பிட்டு நீ கடைசிவரை இப்படியே வேடிக்கை தான் பார்க்க லாய்க்கு.
இவங்க எல்லாம் சேர்ந்து நிலவுக்கு வேற ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்களே தவிர, உன்னை சேர்த்து வைக்க மாட்டாங்க என்று சொல்லிவிடுகிறார். இதனால் கடுப்பான சோழன், இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று முடிவு எடுத்துவிட்டு எப்படியாவது நிலாவுக்கு பைக் சொல்லிக் கொடுக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நிலா மனதில் இடம் பிடித்து விடலாம் என்று முடிவெடுத்து சொல்லிக் கொடுப்பதற்கு போய் விடுகிறார்.
அப்படி சொல்லிக் கொடுக்கும் பொழுது நிலா எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விடுகிறார். இதனால் அடிபட்டதால் வீட்டிற்கு வந்துவிடுகிறார். நிலா கீழே விழுந்ததற்கு காரணம் சோழன் அண்ணன் தான் என்று பல்லவன் சொன்ன நிலையில் சேரன், சோழனை திட்டி விடுகிறார்.
இதனால் சோழன், எல்லோரும் ஏன் நம்மளை திட்டுகிறார்கள் என்ற குழப்பத்திலேயே எரிச்சலாக இருக்கிறார். அந்த நேரத்தில் சாந்தா வீட்டிற்கு வருகிறார். வந்ததும் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு மறுபடியும் பல்லவனும் பாண்டியனும் சேர்ந்து நிலாவுக்கு பைக் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
உடனே சோழன் நானும் சொல்லிக் கொடுக்க வருகிறேன் என்று சொல்லிய பொழுது நிலா நீங்க ஒன்னும் சொல்லத் தர வேண்டாம் பல்லவன் பாண்டியன் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லியதும் சோழன் கடுப்பாக்கி விட்டார். இதனால் வீட்டில் எரிச்சலுடன் இருக்கும் சோழனிடம் நடேசன் மறுபடியும் கடுப்பேத்தும் விதமாக நிலா உன்னை வேண்டாம் என்று சொல்லும் போது இவங்க எல்லாம் ஏன் வாயை மூடிக்கொண்டு இருக்கணும்.
உனக்கு சப்போர்ட்டாக ஏதாவது பேசி இருக்கலாமே என்று சொல்லி கடைசி வரை நீ தனியாளா தான் இருக்கப் போகிறாய் என்று சோழன் மனதை காயப்படுத்துகிறார். இதனால் சோழன், பல்லவன் பாண்டியன் சேரன் மீது கோபப்பட்டு நிலாவை எப்படியாவது தன்னுடைய மனைவியாக மாற்ற வேண்டும் என்று முயற்சி எடுக்கப் போகிறார். ஆனால் சோழன் செய்யப் போகும் விஷயத்தால் சில பிரச்சனைகள் வெடிக்க போகிறது. இதனால் நிலா வீட்டை விட்டு போகவும் வாய்ப்பு இருக்கிறது.