Ayyanar thunai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா தன்மீது காட்டும் பாசத்தை காதல் என்று தவறாக நினைத்து சோழன் நிலாவிடம் பேச ஆரம்பிக்கிறார். ஆனால் நிலா, சோழ நினைப்பது தவறு என்று சொல்லும் விதமாக என்னுடைய அப்பாவும் அண்ணனும் மறுபடியும் உங்களிடம் ஏதாவது பிரச்சனை பண்ணி விடுவாரோ என்ற பயத்தில் தான் நான் நீங்கள் நேரம் கழித்து வந்ததும் பதட்டமடைந்தேன். மற்றபடி ஒன்னும் இல்லை என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் சோழன் ஏமாற்றத்துடன் போய்விடுகிறார். இதை பார்த்த பாண்டியனும் பல்லவனும் வழக்கம்போல் சோழனை கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்ததாக சோழன் நிலாவே இன்டர்வியூக்கு கூட்டிட்டு போகிறார். அதில் நிலாவுக்கு வேலை கிடைத்து விட்டது. அதனால் நிலா சந்தோசமாக இந்த விஷயத்தை சோழனிடம் சொல்லுகிறார்.
ஆனா சோழன் சம்பளம் ரொம்ப கம்மி என்று நிலாவை சீண்டுகிறார். அதற்கு நிலம் முதல் முதலாக ஒரு வேலை பார்க்கும் பொழுது சம்பளம் கம்மியா தான் கிடைக்கும் அதன் பிறகு என்னுடைய திறமைக்கு சம்பளம் அதிகமாகும் என்று சொல்லி சோழனிடம் கோபமாக பேசுகிறார். இந்த சந்தோசமான விஷயத்தை சேரன் அண்ணனிடம் சொல்ல வேண்டும் என்று சேரன் வேலை பார்க்கும் இடத்திற்கு போய் சொல்கிறார்கள்.
அப்பொழுது அங்கே சாந்தனியும் வருகிறார், அந்த வகையில் அனைவரும் ஒன்றாக சந்தித்து பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அடுத்ததாக பாண்டியன் வொர்க் ஷாப்பில் இருக்கும் பொழுது வானதி வந்து பேசுகிறார். ஆனால் வானதியை பார்த்ததும் மறுபடியும் சண்டை போடுவார் என்ற பதட்டத்தில் பாண்டியன் அங்கு இருந்து எஸ்கேப் ஆக பார்த்தார்.
ஆனால் வானதி பொறுமையாக பேசி பாண்டியனின் கோபத்தை தணித்து விடுகிறார். அந்த வகையில் பாண்டியன் இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். இதனை தொடர்ந்து நிலா முதல் முறையாக வேலைக்கு போவதால் நடேசன் என்னுடைய மருமகள் வேலைக்கு போகிறார் என்று ஊர் முழுவதும் பெருமையாக சொல்லி பட்டாசு போட்டு நிலாவை பெருமைப்படுத்தி விடுகிறார்.
அந்த வகையில் இனி யார் என நினைத்தாலும் நிலா இந்த அய்யனார் குடும்பத்தை விட்டு போக மாட்டார். ஏனென்றால் எல்லோரிடமும் நிலாவுக்கு ஒரு புரிதல் ஏற்பட்டு விட்டது. முக்கியமாக சோழனையும் புரிந்து கொண்டு இருவரும் வாழ தொடங்குவார்கள்.