ஜனநாயகனில் விஜய்யின் சம்பளம்.. கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த தளபதி – Cinemapettai

Tamil Cinema News

Vijay : விஜய்யின் 69ஆவது படம் தான் ஜனநாயகன். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ போன்றோர் நடித்திருக்கின்றனர். விஜய்யின் அரசியல் பயணத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. படத்தில் விஜய்யின் போஷன் நிறைவடைந்து உள்ளது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி தியேட்டரில் இந்த படம் வெளியாக இருக்கிறது. ஜனநாயகன் படத்தில் விஜய்யின் சம்பளம் தான் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அதாவது விஜய்யின் முந்தைய படமான கோட் படத்தில் 200 கோடி சம்பளம் பெற்று இருந்தார். இப்போது 75 கோடி உயர்ந்து ஜனநாயகன் படத்திற்கு கிட்டத்தட்ட 275 கோடி சம்பளம் பெறுகிறார். மேலும் இலாபத்தில் இந்த பங்கும் விஜய்க்கு கிடையாது.

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் சம்பளம்

இந்த சூழலில் சமீபத்திய தகவலின்படி தென்னிந்திய நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களும் முதலிடத்தில் விஜய் இருக்கிறார். இவ்வாறு 275 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக அரசியல் இறங்க இருக்கிறார்.

இப்படி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளில் மமிதா பைஜூ தேர்தல் முடிவுக்குப் பிறகு நடிப்பதை பற்றி முடிவு எடுப்பேன் என்று விஜய் சொன்னதாக கூறியிருந்தார். மேலும் அரசியலில் இறங்கினாலும் விஜய் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.