Vijay : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு ஒட்டுமொத்த திரை உலகத்தின் எதிர்பார்ப்பும் இருக்கிறது. துணிவு படத்திற்கு பிறகு ஹெச் வினோத் விஜய்யின் படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் இரண்டு ஆளுமைகளான அஜித், விஜய் இருவருடனும் பயணித்துவிட்டார்.
இப்போது ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் அடுத்ததாக யார் படத்தை வினோத் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் ஹெச் வினோத் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கதை கூறியிருக்கிறாராம். ஆகையால் அடுத்த கூட்டணி ரஜினி, வினோத் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல ஹீரோவின் படத்தை இயக்க போகும் வினோத்
ரஜினி இப்போது கூலி படத்தை முடித்த நிலையில் அடுத்ததாக ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தன்னுடைய பயோபிக் கதையை எழுத உள்ளதால் சிறிது இடைவெளி எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.
இப்போது வினோத் கதை கூறியிருப்பதால் உடனடியாக ஜெயிலர் 2 பிறகு இந்த படம் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் வினோத் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே பெரிய நடிகர்களின் படங்களை அடுத்தடுத்து இயக்கி வருகிறார்.
மேலும் ஜனநாயகன் படம் அரசியல் கதைகளத்தில் உருவாகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் நுழைவிற்கு மிக பக்கபலமாக இந்த படம் அமைய உள்ளது.