Vijay : விஜய் இப்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரது கடைசி படம் தான் ஜனநாயகன் என்று கூறப்படுகிறது. இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் லோகேஷின் லியோ படத்தில் விஜய் நடித்திருந்தார்.
இந்த படம் கைதி, விக்ரம் ஆகியவற்றை தொடர்ந்து எல்சியு கான்செப்டில் தான் வந்தது. இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை லோகேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோஷனில் இறங்கி இருக்கிறார்.
இதில் கலந்துகொண்ட பேசிய லோகேஷ் விஜய் அண்ணா இல்லாமல் எல்சியு முழுமை பெறாது என்று கூறியிருக்கிறார். அவர் மீண்டும் சினிமாவிற்குள் வருவாரா, இல்லையா என்பது விஜய் இடம் தான் கேட்க வேண்டும். மேலும் அவரின் எண்ணம் என்ன என்று தமக்கு தெரியும்.
விஜய்யின் சினிமா கேரியர் பற்றி பேசிய லோகேஷ்
ஆகையால் இதுகுறித்து பதில் சொல்ல இது சரியான நேரம் இல்லை என்று கூறியிருக்கிறார். எனவே விஜய்யின் அரசியல் முடிவு குறித்து அவர் சினிமாவில் நடிப்பாரா என்பது தீர்மானிக்கப்படும். அதாவது விஜய் தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில் நடிப்பது கடினம்.
ஒருவேளை அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை என்றால் மீண்டும் சினிமாவில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் அட்லீயும் விஜய்யை வைத்து ஒரு படத்தை எடுக்க ஆர்வமாக இருக்கிறார்.
பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரத்தை முழு படமாக எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அட்லீயும் அந்த படத்தை எடுப்பேன் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்திருக்கிறார். ஆகையால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் விஜய்யின் முடிவு தெரிய வரும்.