Vijay : சினிமாவில் எப்படி விஜய்க்கு பேரும் புகழும் கிடைத்ததோ, அதே போல் தான் இப்போதும் அரசியலிலும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது.
தனது 275 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் இல்லை. அதுவும் மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் மேலும் இடம் பிடித்தது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் மக்களிடையே எதிரொலியாக இருந்தது. அதை இப்போது நிறைவேற்றி காட்டுவார் என்று நம்பிக்கையும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியலில் விஜய்க்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்தால் நிச்சயம் 2026 தேர்தலில் விஜய் தான் வெற்றி பெறுவார் என்ற கருத்து கணிப்பும் நிரூபிக்கிறது.
இந்நிலையில் விஜய் தனது 69ஆவது ஜனநாயகன்படத்தை முடித்தே தீர வேண்டும் என்று உறுதியோடு இருந்தார். தற்போது அந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் முடியவுள்ளது.
இந்நிலையில் த.வெ.க கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் விஜய் இனி வாரம் வாரம் இந்த பணி செய்ய வேண்டும் என்று ஒரு அட்டவணையை போட்டுள்ளார்.
திங்கள் மற்றும் செவ்வாய் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களை சந்திக்க வேண்டும். புதன் & வியாழன் பொதுமக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்க வேண்டும். வெள்ளி பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சனி, ஞாயிறு ஓய்வெடுப்பு. இதுபோன்று விஜய் கட்சியின் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
அமைச்சர் சேகர் பாபு கருத்து..
மக்களை சந்திப்பேன் என்ற விஜய் பேச்சுக்கு உங்களது கருத்து?
சேகர் பாபு : அவரையும் அவரை சார்ந்தவரையும் விஜய் பார்த்துக் கொண்டால் போதும், முதல்வரை சந்திப்பேன் என்று அறையில் இருந்து கொண்டிருக்க கூடாது. எங்கள் முதல்வர் எல்லாத்தையும் லெப்ட் ஹேன்டில் டீல் பண்ணிட்டு போயிருவாரு.