H.vinoth : இயக்குனர் ஹச். வினோத் அவர்கள் தமிழில் இயக்கையிட்டது ஒரு சில படங்கள் என்றாலும் இதன் மூலம் அவர் பெற்ற மதிப்புகளும், புகழும் ஏராளம். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை போன்ற நிறைய படங்கள் இயக்கியுள்ளார்.
இவர் தற்போது நடிகர் விஜய் அவர்களின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை தயாரித்து வருகிறார். இது தற்போது வெளியாகும் நிலையில் தயாராக உள்ளது. மேலும் இன்னும் ஒரு சுவாரஸ்யமான விஷயங்கள் என்னவென்றால் இயக்குனர் ஹச் வினோத் ஜனநாயகன் படம் இயக்கும்போதே தனுஷ் அவர்களுடன் படம் செய்வதற்காக வாய்ப்பு இருந்தது.
ஜனநாயகன் முடிந்த கையோடு அடுத்த ஹீரோவை தூக்கிய ஹச். வினோத்..
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பதாகவும் ஜனநாயகம் படம் இயக்கி கொண்டிருக்கும்போதே ஹச் வினோத், தனுசு உடன் இணைந்து படம் தயாரிப்பாக இருந்து வந்த நிலையில். நடிகர் விஜய் அவர்களிடம் இருந்து கடைசி படமாக ஜனநாயகன் படம் வேலையில் இருந்து வந்தார் ஹச். வினோத்.
அதற்காக நடிகர் தனுஷ் பெருந்தன்மையுடன் விஜய் அவர்களின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, தன் படத்தை விஜய் அவர்களுக்காக விட்டுக் கொடுத்து, விஜய் அவர்களின் படம் முடிந்த கையோடு நாம் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளார் என்ற தகவல் கசிந்து வருகிறது. ஜனநாயகன் படம் முடிந்த கையோடு பிசியாக போகிறார் ஹச்.வினோத்.
இதன் மூலம் ஒரு படத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு தாமாகவே முன்வந்து விலகிக் கொண்டு விஜய் அவர்களுக்காக தனுஷ் மிகப்பெரிய உதவி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தற்போது வடசென்னை 2 பிரச்சனைகள் கூட பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்திருக்கிறார் தனுஷ்.
இவர்கள் இரண்டு பேரின் கூட்டணி நன்றாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஹச் வினோத் கூட்டணியில் வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனவுடன் தொடங்கும் என வெளி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளிவரும்.