பக்காவா பூஜையெல்லாம் போட்ட குணசேகரன் வீட்டில் இருக்கிற சங்கடங்கள் எல்லாம் தீரும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறது பூகம்பம். பூஜை போட்ட ஐயர் மருமகள்களை கூப்பிட்டு புனித தீர்த்தத்தை வீடு முழுக்க தெளிக்க சொல்கிறார்.
ஏற்கனவே அறிவுக்கரசியின் மீது இருக்கும் சந்தேகத்தால் ஏதாவது துருப்புச் சீட்டு கிடைக்காதா என ஜனனி முதல் நந்தினி வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜீவானந்தம் முதலில் குணசேகரனுக்கு எதிராக ஆதாரத்தை சேகரியுங்கள் என இவர்களை முடுக்கி விட்டுள்ளார்.
புனித தீர்த்தத்தை தெளிக்கிற சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜனனி மற்றும் நந்தினி அறிவுக்கரசியின் ரூமில் இருக்கும் அவரது போனை ஆட்டையை போடுகிறார்கள். அதில் குணசேகரன், ஈஸ்வரியை தாக்கும் வீடியோ இருக்கிறது.
ஆனால் பூனை போல் பதுங்கி சென்ற சூதுவாது தெரியாத நந்தினியோ அறிவுகரசியிடம் மாட்டிக் கொள்கிறார். என் ரூமுக்கு எதுக்கு செல்கிறாய் என நந்தினி இடம் சண்டையிடுகிறார் அறிவு. புனித நீர் தெளிக்க தான் வந்தேன் என வாக்குவாதம் செய்கிறார். வெளியிலிருந்து குணசேகரன் அவளை வேலை செய்ய விடு என அறிவுகரசியை திட்டுகிறார்.
உள்ளே சென்ற நந்தினி அறிவுக்கரசியின் மொபைல் ஃபோனை தூக்கி ரூமுக்கு பின்புறம் நின்று இருந்த ஜனனி இடம் கொடுக்கிறார். இப்பொழுது வசமான ஆதாரம் சிக்கிக் கொண்டது இனிமேல் தான் இருக்கிறது ஜனனியின் ஆட்டம். மொபைலை காணும் என ஒரு பக்கம் அலசுகிறார் அறிவு.