GV பிரகாஷ் : தமிழ்நாட்டு மக்களில் பாதி பேர் ஜீவி பிரகாஷின் இசை இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஜீவி இல்லாமல் இசை இல்லை. இசை இல்லாமல் ஜீவி இல்லை. ஜீவி ஹீரோவாக நடித்திருப்பது அனைவருக்கும் பயங்கரமான ஷாக்.
2015 இல் முதன் முதலில் டார்லிங் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானர் ஜிவி பிரகாஷ். அதன்பின் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, புரூஸ் லீ, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர் போன்ற திரைப்படத்தின் மூலம் தனது ஹீரோ இமேஜை தக்க வைத்துக் கொண்டார்.
சினிமாவில் ஒரு நடிகனாக இருந்தாலும் இசையமைப்பாளராக இருந்தாலும் அந்தத் திரைப்படத்தின் பட்ஜெட்டை பொருத்து தான் சம்பளமும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜிவி பிரகாஷின் சம்பளம் ஒரு திரைப்படத்தில் குறைந்துள்ளது.
பல ஹிட் படங்களை கொடுத்த ஜிவி பிரகாஷ், தற்போது பிளாக்மெயில் என்ற திரைப்படத்தில் கால் அடி எடுத்து வைத்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்வினி நடிக்கிறார். இந்த திரைப்படம் நேற்று ஜூலை 19 வெளியானது.
குறைவான சம்பளம்..
பிளாக் மெயில் சாதாரண திரைப்படமாக இல்லாமல் மன அழுத்தம், திகில் சம்பவங்கள் மற்றும் சமூக சிக்கல்களை சுட்டிக்காட்டும் ஒரு திரைப்படமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடந்துள்ளது இதில் ஜிவி பிரகாஷ் பற்றி ஒரு தகவல் வெளிவந்தது.
படத்தில் நிதி நெருக்கடி காரணமாக அந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் தனது சம்பளத்தை 50 சதவீதம் குறைத்துக் கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதைக்கேட்ட ரசிகர்கள் ஜிவி பிரகாஷா இப்படி மாறி இருக்கிறார் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறனர்.