ஜூலை மாதம் வெளியாகும் 7 படங்கள்.. பகத் பாசிலுடன் மோதும் விஜய் சேதுபதி – Cinemapettai

Tamil Cinema News

Vijay Sethupathi : ஜூன் மாதம் கமலின் தக் லைஃப், தனுஷின் குபேரா போன்ற படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. விஜய் ஆண்டனியின் மார்க்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில் அடுத்த மாதம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். முதலாவதாக மிர்ச்சி சிவா மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் பறந்து போ படம் ஜூலை நான்காம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தங்கமீன்கள், கற்றது தமிழ் போன்ற படங்களை இயக்கிய ராம் இயக்கியிருக்கிறார்.

அடுத்ததாக விக்ரம் பிரபு, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் Ghatti படம் ஜூலை 11ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை சிம்பு, அனுஷ்கா நடிப்பில் வெளியான வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்கி இருக்கிறார்.

ஜூலை மாதம் வெளியாகும் 7 படங்கள்

ஜூலை 4 ஆம் தேதி சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 3BHK படம் வெளியாகிறது. சரத்குமார் மற்றும் தேவயானி இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஒரு குடும்ப எண்டர்டெயின்மென்ட் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஃப்ரீடம் ஆகஸ்ட் 14. இந்த படம் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. தேசிங்கு ராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

விமல், பூஜிதா நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் ஜூலை 14 திரைக்கு வருகிறது. மேலும் மாமன்னன் படத்தை தொடர்ந்து பகத் பாஸில், வடிவேலு கூட்டணியில் உருவாகி இருக்கிறது மாரீசன். ‌ மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் ஜூலை 18 வெளியாகிறது.

மாரீசன் படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் வெளியாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆகையால் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இடையே கடுமையான போட்டி நிலவ இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.